இன்றைய ராசி பலன்(31.12.2024)
மேஷம்:
இன்று பெரியவர்கள் ஆதரவால் முக்கியமான காரியங்களை செய்து முடிப்பீர்கள்.வியாபாரத்தை விரிவு செய்வதை பற்றி தீவிரமாக சிந்திப்பீர்கள்.தொழிலில் வரும் லாபம் திருப்தி தரும்.
ரிஷபம்:
இன்று செயல்களில் சற்று கவனமாக இருக்கவேண்டும்.பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானமாக இருக்கவேண்டும்.எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வதால் நன்மை பெறலாம்.
மிதுனம்:
மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.நீண்ட நாள் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சன்னை முடிவிற்கு வரும்.உங்கள் சிந்தனை செயல் தெளிவாக இருக்கும்.வீட்டில் சுபகாரியங்கள் பேச்சு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கடகம்:
கவனமுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர். உடல்நிலை சீராகும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
சிம்மம்:
வேலை செய்யும் இடத்தில் உண்டான கஷ்டங்கள் விலகும்.வியாபாரத்திற்காக செல்லும் வெளியூர் பயணம் ஆதாயமாக அமையும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகும்.
கன்னி:
அரசு வழியில் உங்களுக்கு ஏற்ற உதவி கிடைக்கும்.மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.நேற்றைய சுமையை சரி செய்வீர்கள்.தந்தை வலி உறவால் மகிழ்ச்சி உண்டாகும்.மனக்குழப்பம் அகலும்.
துலாம்:
செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருந்து செய்து முடிப்பீர்கள்.காலையில் உடல்நலனில் ஏற்பட்ட உபாதைகள் சரி ஆகும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.தொழில் வளர்ச்சி சந்தோசம் கொடுக்கும்.
விருச்சிகம்:
சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சூழ்நிலையை அறிந்து செயல்பட்டு லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
தனுசு:
குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் உண்டாகும்.குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இறைவழிபாடு கைகொடுக்கும்.
மகரம்:
உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர். மனம் குழப்பமடையும்.செலவிற்கேற்ற வரவு வரும்.
கும்பம்:
இன்று சுயநலமாக சிந்தித்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.பழைய பகையை மறந்து குடும்பத்தில் உறவாடுவது நன்மை தரும்.பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசவேண்டும்.
மீனம்:
அலுவலகத்தில் உண்டான வேலை பளு குறையும்.உயர் அதிகாரியின் துணை உங்களுக்கு கிடைக்கும்.இறைவழிபாடு உங்களுக்கு நினைத்த காரியத்தை சாதிக்க உதவும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |