இன்றைய ராசி பலன்(07.12.2024)
மேஷம்
செய்யும் வேலைகளில் தடங்கல் உண்டாகும்.பணப்புழக்கம் மனநிம்மதியை தரும்.தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.
ரிஷபம்
அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரம்.நன்மையான நாள்.
மிதுனம்
நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.வீட்டு பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் உண்டான பிரச்சனை சரி ஆகும்.மனதில் தெளிவும் உற்ச்சாகமும் பிறக்கும்.
கடகம்
இறை வழிபாடு நன்மை தரும். புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.இன்று யாரிடமும் விவாதம் வேண்டாம். அதனால் பிரச்னை உருவாகும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.
சிம்மம்
தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர்கள். வரவேண்டிய பணம் வரும்.வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த வரவு வரும்.
கன்னி
உடல் உபாதைகள் சரி ஆகும்.பிறர் மனதை புரிந்து நடந்து கொள்வீர்கள்.உங்களுக்கு உண்டான வாழ்க்கையில் பிரச்சனையில் பிறர் தலையிட வேண்டாம்.அமைதி காக்க வேண்டிய நாள்.
துலாம்
வேலையில் சிறு சிறு தடங்கல் உண்டாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும்.உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும்.பிறரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டிய நாள்.
விருச்சிகம்
மனதில் உற்சாகம் உண்டாகும். தொழிலில் இருந்த தடை விலகி வருமானம் அதிகரிக்கும்.உங்கள் திறமை வெளிப்படும். வரும் வருவாயைக் கொண்டு நெருக்கடிகளை சரி செய்வீர்.
தனுசு
மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாளுவீர்கள்.வீட்டிற்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மகரம்
வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உங்கள் முயற்சி லாபமாகும். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி தீரும்.மனக்குழப்பம் விலகும்.குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அதிகரிக்கும்.இன்று எந்த ஒரு புதிய முயற்சிகளும் எடுக்க வேண்டாம்.மன தைரியத்துடன் செயல்படுவது நண்மையை தரும்.
மீனம்
இன்று நீங்கள் எதிர்பாராத காரியங்கள் நடக்கும்.வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டும்.வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.யாரையும் எளிதில் நம்பி காரியத்தை கொடுக்கவேண்டாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |