அலைமகள் கலைமகள் மலைமகள் வாசம் செய்யும் தீபம்

By Yashini May 22, 2024 09:30 PM GMT
Report

இந்து மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது வழக்கம்.

வீடுகளிலும் விளக்குக்கு பூஜை செய்வதற்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபட வேண்டும்.

அந்தவகையில், குறிப்பிட்ட எண்ணெய் மற்றும் திரியில் ஏற்றப்படும் தீபம் நோய்களை விரட்டும் என்பார்கள்.

அலைமகள் கலைமகள் மலைமகள் வாசம் செய்யும் தீபம் | Deepathin Magimai In Tamil

தீபமாகிய நெருப்பு என்னும் ஒளி வடிவமே அக மற்றும் புற இருளாகிய அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தை வழங்கக்கூடியது.

தீபத்தின் ஒளியில் கலைமகளான சரஸ்வதியும், சுடரில் திருமகளான லட்சுமியும், வெப்பத்தில் மலைமகளாகிய உமையம்மையும், இருப்பதாகக் கருதப்படுகிறது.

எனவே தான் இந்து மதத்தில் கோவில்களில் கோடி தீபம், லட்சதீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன.

அலைமகள் கலைமகள் மலைமகள் வாசம் செய்யும் தீபம் | Deepathin Magimai In Tamil  

வீடுகளில் தீபத்தை காலையில் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது நல்லது.

அதே போல் மாலையில் பிரதோஷ நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஏற்றுவது சிறந்த பலன்களைக் கொடுக்கும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US