தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள்

By Sakthi Raj Nov 07, 2026 10:45 AM GMT
Report

  உலகெங்கிலும் வாழக்கூடிய இந்தியர்களால் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாட உள்ளது. அந்த வகையில், தீபாவளி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான கொண்டாடுகிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள் | Diwali Celebrations Across Different Indian States

1. உத்தரப் பிரதேசத்தில் கோவர்த்தன விரதம்:

உத்தர பிரதேச மாநிலத்தில் தீபாவளியை முன்னிட்டு கோவர்த்தன வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாளில் அவர்கள் கிருஷ்ண பகவானை நினைத்து கோவர்த்தன விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்.

அதாவது புராணங்களின்படி இந்திரனின் கோபத்தால் ஏற்பட்ட பெரும் மழையிலிருந்து கோகுல மக்களையும், கால்நடைகளையும் காப்பாற்றுவதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மழையை அவருடைய சுண்டு விரலால் தூக்கிப் பிடித்தார். இதனால் கோகுல மக்கள் மிகப்பெரிய ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டன.

இந்த நிகழ்வை அவர்கள் நினைவு கூறும் வகையில் கோவர்த்தன பூஜை செய்கிறார்கள். குறிப்பாக விவசாயமும் கால்நடை வளர்ப்புகளும் நலமுடன் இருப்பதற்கும் விவசாயத்தில் செல்வ செழிப்புடன் மக்கள் உயர்ந்த நிலைக்கு செல்வதற்கும் கிருஷ்ணரை வழிபாடு செய்கிறார்கள். இந்த வழிபாடு நமக்கு விவசாயத்தையும் கால்நடைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைப்பதாக அமைகிறது.

தீபாவளி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? சிறப்பான பாரம்பரியங்கள் | Diwali Celebrations Across Different Indian States

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நேரம் எது?

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நேரம் எது?

2. அமிர்தசரஸ் பொற்கோயிலில் லட்சக்கணக்கான தீபங்கள்:

தீபாவளி முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொற்கோயிலில் ஒளி அலங்காரங்கள் பார்ப்பவர்களை கவரும் விதமாக அமைகிறது. சீக்கியர்களின் மிகவும் புனிதமான வழிபாட்டு தலங்களில் இந்த ஆலயம் ஒன்றாகும்.

தீபாவளி திருநாளன்று பொற்கோயிலும் அதன் புனித குளமும் வண்ணமயமான மின் விளக்குகளாலும் பாரம்பரிய தீபங்களாலும் அலங்கரிக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கான தீபங்கள் ஒளிர்வது போன்ற பிரம்மாண்டமான கொண்டாட்டமான இந்த காட்சி பக்தர்களையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்கிறது.

சீக்கியர்களைப் பொறுத்தவரை இந்த நாள் பந்தி சோர் திவாஸ் என்ற சிறப்புப் பெயரிலும் கொண்டாடப்படுகிறது. குரு ஹர்கோபிந்த் சாஹிப் அவர்களுடைய விடுதலையையும் அவருடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அரசர்களையும் நினைவு கூறும் வகையில் முக்கியமான நாளாக இது விளங்குகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US