உலகமெங்கிலும் இருக்கக்கூடிய இந்தியர்களால் தீபாவளி பண்டிகை மிகவும் விமர்சையாக 2026 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கொண்டாட உள்ளது. மேலும், தீபாவளி அன்று நம் ஒவ்வொரு வீடுகளிலும் தவறாமல் செய்யக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் அன்றைய தினம் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது.
பொதுவாகவே, எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமக்கு பலவிதமான நன்மைகளை உடலுக்கும் மனதிற்கும் வழங்குகிறது.இருப்பினும் எண்ணெயை நாம் அபசகுனமாகவே பார்ப்பது உண்டு. அதுவும் ஒரு கொண்டாட்டமான நாட்களில் தலைக்கு எண்ணெய் வைப்பது கிடையாது.
ஆனால், தீபாவளியான ஒரு சிறப்பு பண்டிகை தினத்தில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உரிய காரணம் என்ன தெரியுமா? அதை போல் எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது? எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு நாம் செய்யக்கூடாத தவறுகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது பின்னால் இருக்கும் சாஸ்திரம்:
ஒருவர் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும் ஒரு உகந்த நாள் இருக்கிறது. அதாவது ஞாயிற்றுக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளித்தால் மன வருத்தத்தையும், திங்கட்கிழமை புத்துணர்ச்சியும், செவ்வாய்க்கிழமை உடல்நல குறைவையும், புதன்கிழமை செல்வத்தையும், வியாழக்கிழமை உடல் நலத்தையும், வெள்ளிக்கிழமை அதிக செல்வ வளத்தையும், சனிக்கிழமை விரும்பிய விஷயத்தை அடைவதையும் கொடுப்பதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
அப்படியாக, தீபாவளி பண்டிகையன்று எண்ணெயில் லட்சுமி தேவியும், தண்ணீரில் கங்காதேவியும் இருப்பதாக ஐதீகம். அதேபோல், விஷ்ணு புராணத்தில் ஒரு வரலாறு இருக்கிறது. நரகாசுரனுடன் விஷ்ணு பகவான் போரில் இருந்த நேரத்தில் அரக்கர்கள் லட்சுமி தேவியை கவர்ந்து செல்ல முயற்சி செய்கிறார்கள்.
உடனே லட்சுமி தேவி பகவான் போர் முடிந்த திரும்பும் வரை எரிந்து கொண்டிருந்த ஒரு தீபத்தில் மறைந்து விட்டதாக விஷ்ணு புராணம் சொல்கிறது. மேலும், இந்த புண்ணிய தினத்தில் தான் பாற்கடலில் தோன்றிய திருமகளை நாராயணன் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது தேவர்களுடன் எமதர்மராஜனும் பணிந்து போற்றினார். மேலும். இதை பார்த்த லட்சுமி தேவி எமதர்மராஜாவிடம் இந்த பண்டிகையை முறையாக கடைப்பிடிப்பவர்கள் வீட்டில் என்னுடைய உத்தரவு இல்லாமல் நீ பிரவேசிக்க கூடாது என்று ஒரு உத்தரவு போடுகிறாள். லட்சுமிதேவி உடைய உத்தரவை எமதர்மராஜன் ஏற்றுக்கொள்கிறார்.

எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்யக்கூடாதவை :
தீபாவளி என்று கண்டிப்பாக எல்லோரும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இருப்பினும் அவர் அவர் உடல்நிலைக்கு ஏற்ப இதை செய்வதும் அவசியம். அந்த வகையில், காலையில் 5 மணி முதல் 7 மணி வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க நல்ல நேரமாக இருக்கிறது.
மதியம் 12 மணிக்கு பிறகு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் நல்ல பலன் கொடுப்பதில்லை. அதேபோல், நல்லெண்ணெய் தேய்த்து குளித்த நாளில் கட்டாயமாக உறங்கக்கூடாது. தூங்கினால் அதற்குரிய பலன் கிடைப்பது இல்லை. காரணம், நலனைத் தேய்த்து குளித்து இருப்பதால் கண்களில் இருக்கக்கூடிய வெப்பம் வெளியேறிக் கொண்டிருக்கும். அப்பொழுது தூங்கினால் உடல் நலம் பாதிக்கும்.

கங்கா ஸ்நானம் :
தீபாவளி அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் கங்கா ஸ்நானம் என்று சொல்வதுண்டு. இதற்கு பெயர் எப்படி வந்தது தெரியுமா? அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து தலை முழுகினால் நம்முடைய பாவமெல்லாம் கரைந்து விடும் என்பது நம்பிக்கை.
கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்த தினமே தீபாவளியாக நாம் கொண்டாடுகிறோம். அன்று சிவபெருமான் உலகில் இருக்கக்கூடிய நீர்நிலை அனைத்துக்கும் கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம்.
இந்த ஐதீகத்தின் அடிப்படையில் நம் வீட்டில் உள்ள கிணறு குழாய் ஆகிவற்றில் வரும் தண்ணீரில் அனைத்தும் கங்கை நீராகவே பாவிக்கப்படுகிறது. இதனால் தீபாவளி என்று காலையில் நீராடுவதை கங்கா ஸ்நானம் என்று சொல்கின்றோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |