இந்த ஒரு விஷயம் தெரியாமல் கோவில் மணியை அடிக்காதீர்கள்
நம்முடைய இந்து மதத்தில் கோவில் வழிபாடுகளிலும் வீடுகளில் செய்யக்கூடிய வழிபாடுகளிலும் நாம் மணி அடித்து பூஜை செய்யும் வழக்கம் உண்டு. இவ்வாறு மணி அடித்து வழிபாடு செய்யும் பொழுது நம் மனமானது ஒரு நிலை பெற்று பூஜையில் கவனம் செலுத்தக்கூடிய நிலையை உண்டு செய்யும்.
அது மட்டும் அல்லாமல் மணி ஓசையால் அந்த இடங்களில் சூழ்ந்து இருக்கக்கூடிய தீய சக்திகள் ஓடிவிடும் என்பதாலும் கட்டாயமாக பூஜை வேளையில் நாம் மணி அடித்து வழிபாடு செய்கின்றோம்.
அந்த வகையில் கோவிலுக்கு சென்று நாம் இறைவழிபாடு செய்யும்பொழுது அங்கு இருக்கக்கூடிய ஆலய மணியை நாம் எப்பொழுது அடிக்கலாம்? எப்பொழுது மணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.

கோவிலுக்குள் வழிபாடு செய்ய நுழைந்த உடனே நாம் அங்கு இருக்கக்கூடிய மணியை அடித்து வழிபாடு செய்ய தொடங்குவது என்பது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.
அது மட்டுமல்லாமல் நம்முடைய மனதில் ஏதேனும் குழப்பங்களும் சிந்தனையும் இருந்தால் அது உடனடியாக விலகி சுவாமியை வழிபாடு செய்வதில் கவனம் செல்லும் என்பதால் இதை நாம் பின்பற்றலாம் என்கிறார்கள்.
அது மட்டும் அல்லாமல் கோவிலில் சுவாமிக்கு தீப ஆராதனை காட்டுகின்ற வேளையில் மணி ஓசை எழுப்புவது என்பது ஒரு மிகப்பெரிய சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது நம்முடைய உடலில் ஒரு நல்ல அதிர்வலைகளை உருவாக்கி நேர்மறை ஆற்றலை கொடுக்கிறது.

இருப்பினும் நாம் ஆலய வழிபாடு முடிந்து வெளியே வரும் பொழுது நாம் அங்கு இருக்கக்கூடிய மணி ஓசையை அடிப்பது கூடாது என்று சொல்கிறார்கள். இவ்வாறு செய்வது நம்முடைய மன அமைதியை அவை தொந்தரவு செய்வதற்கான நிலை உண்டு என்று சொல்கிறார்கள்.
ஆதலால் கோவில் வழிபாடு முடித்து வெளியே வரும் பொழுது மன அமைதியோடு அதே சிந்தனையோடும் கவனிச்சிதறல் இல்லாமல் நாம் இறைவனை நினைத்தபடியே வர வேண்டும்.
அதேபோல் வீடுகளில் பூஜை செய்யும் பொழுது ஒரு கையில் தீப ஆராதனையும் இடது கைகளிலும் மணியை வைத்து அவர்கள் பூஜையை செய்ய வேண்டும். இரவு நேரத்தில் ஒரு பொழுதும் நாம் இந்த மணி ஓசையை அதிக சத்தமாக எழுப்பவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |