என்ன தானங்கள் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
இந்து மாதத்தில் தானம் செய்வது புண்ணியச்செயலாக பார்க்கப்படுகிறது.
இல்லாதவருக்கு நாம் செய்யும் தானதர்மங்கள் நமக்கு பல்வேறு நன்மைகளை தரும்.
அந்தவகையில், எந்த தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மஞ்சள் தானம்- மங்களம் உண்டாகும்.
பூமி தானம்- இகபர சுகங்கள்.
ஆடை தானம்- சகல ரோக நிவர்த்தி.
கோ தானம்- பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.
எள் தானம்- பாப விமோசனம் அடையலாம்.
வெல்லம் தானம்- குலம் அபிவிருத்தி அடையும்.
நெய் தானம்- வீடுபேறு அடையலாம்.
தேன் தானம்- இனிய குரல் கிடைக்கும்.
சொர்ண தானம்- கோடி புண்ணியம் உண்டாகும்.
வெள்ளி தானம்- பித்ருகள் ஆசி கிடைக்கும்.
தண்ணீர் தானம்- மனசாந்தி ஏற்படும்.
கம்பளி தானம்- துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.
பால் தானம்- சவுபாக்கியம் கிடைக்கும்.
சந்தனக்கட்டை தானம்- புகழ் கிடைக்கும்.
அன்ன தானம்- சகல பாக்கியங்களும் உண்டாகும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது.
தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |