விநாயகி அம்மன் பற்றி தெரியுமா?

By Yashini Apr 22, 2024 11:31 PM GMT
Report

விநாயகி என்பவர் யானை தலையுள்ள இந்து பெண் தெய்வம்.

பிள்ளையாரை நம்முடைய இஷ்டப்படி எப்படி வேண்டுமோ வழிபடலாம் என்பது மக்களின் எண்ணமாக இருந்தது. 

விநாயகி, யானை தலையினை கொண்டிருப்பதால், விநாயகருடன் இவரை சம்பந்தப்படுத்தி பேசுவதுண்டு.

ஸ்ரீ கணேசா, வைநாயகி, கஜனனா, விக்னேஷ்வரி, கணேசானி என்று பல பெயர்களில் இவரை அழைக்கிறார்கள்.

விநாயகி அம்மன் பற்றி தெரியுமா? | Do You Know Who Is Vinayaki

விநாயகி சில நேரங்களில் 64 யோகினி தெய்வங்களுடன் இருக்கிறார். ஜெயின் மற்றும் புத்தத்தில் விநாயகியை ஒரு தனி தெய்வமாகவே குறிப்பிடுகிறார்கள்.  

புத்த மதத்தில் விநாகியை 'கணபதி ஹிரிதயா’ என்று அழைக்கிறார்கள். அதாவது கணபதியின் இதயம் என்று பொருள்.

முதலாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விநாயகியின் சிலை ராஜஸ்தானில் உள்ளது. அதன் பிறகு 10ம் நூற்றாண்டிலிருந்தே விநாயகியின் சிலை கண்டெடுக்கப்பட்டது.

விநாயக பெருமானை வழிபடும் சரியான முறை இதுதான்

விநாயக பெருமானை வழிபடும் சரியான முறை இதுதான்

மிகவும் பிரபலமான விநாயகியின் சிலை மத்திய பிரதேசத்தில் உள்ள சௌசாத் யோகினி கோயிலில் அமைந்துள்ளது. 

மச்ச புராணத்தில் விநாயகியை பற்றி கூறப்பட்டிருக்கிறது. சிவபெருமான் அரக்கனை வதம் செய்யவே விநாயகியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

விநாயகி அம்மன் பற்றி தெரியுமா? | Do You Know Who Is Vinayaki  

ஹரிவம்சா, வாயு மற்றும் ஸ்காந்த புராணங்களிலும் விநாயகியை பற்றிய குறிப்புகள் உள்ளன.

எல்லா தொடக்கங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடிய விநாயகப் பெருமான் ஏற்ற பெண் வடிவம்தான் விநாயகி என்றும் கூறுகிறார்கள். 

விநாயகருக்கு பல்வேறு வடிவங்கள் இருப்பதாக விநாயக புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி விநாயகர் ஏற்ற பெண் வடிவம்தான் விநாயகி.

தமிழ்நாட்டில் சொல்லுமளவிற்கு விநாயகிக்கு தனி சன்னிதியில்லை என்றாலும் கோயில் தூண்களில் விநாயகியை காண முடியும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US