எத்தனையோ வருடமாக கோவிலுக்கு போகிறேன், பூஜை செய்கிறேன், வீட்டில் தினமும் இரண்டு வேலை பூஜை செய்கிறேன் எப்போ எல்லாம் Leave கிடைக்குதோ அப்போ எல்லாம் கோவில்களுக்கு யாத்திரை போய்ட்டு வர்றேன்,
Bag ல கூட சாமி போட்டோ & Mobile Wallpaper ல இஷ்ட தெய்வம், Ringtone ல கூட சாமி பாட்டு தான், வாரம் ஒரு முறை விரதம் இருக்கிறேன்.....ect.......ect.......
இது ஒரு வகை இனொரு type இருக்கு நான் தியானம் செய்யுறேன். எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை, இந்த இயற்கை தான் கடவுள், நான் கோவிலுக்கு வர மாட்டேன், என் பயிற்சி முறை வேறு, வாழ்க்கை முறை வேறு, எனும் Categorie மக்கள் ஒரு பக்கம் கடவுள் ஒருத்தர் இல்லை,
எல்லாம் மூட பழக்கம் தான், கோவில்களுக்கு போகாதீங்க, குடும்பத்தை பாருங்க, என பேசி வரும் அன்பானவர்கள் ஒரு பக்கம், இதில் எந்த Categorie ல் எப்படி இருந்தாலும் நாம் எல்லோரும் இறைநிலையில் தான் இருக்கிறோம்.
தண்ணீரில் இருக்கும் மீன்கள் நாம், எத்தனை குறை கூறினும் தண்ணீர் நம்மிடம் பேதம் பார்ப்பது இல்லை அனைவரையும் அரவணைத்து உயிர் வாழ வழி செய்கிறது.
சரி ஆள் ஆளுக்கு ஒரு வழியை Follow பண்றிங்க, நிறைவா இருக்கீங்களா னு கேட்டால் மூஞ்சிய வேற பக்கம் திருப்பி வச்சிகுறீங்க தியானம் பண்றவங்களுக்கு தான் அதிகமா கோபம் வருது,
நெற்றில் விபூதி, குங்குமம் வைக்கிறவங்கல்ல பாதி பேர் அடுத்தவனை குறை சொல்லிட்டே இருக்காங்க, அவ்ளோ ஏன் பௌர்ணமி இரவு கிரிவலம் போகும் போதும் புரளி பேசிகிட்டு Selfe எடுத்து Social Media ல போட்டு Yesterday Night Bakthi Mode னு Status மட்டும் வைக்கிறாங்க.
கடவுள் இல்லை னு சொல்லிக்கிட்டு அடுத்தவனை ஆட்டைய போடறது ல முதல் ஆளா இருக்காங்க, மேலே போட்டுக்குற சட்டை மாதிரி ஆகிடுச்சு இந்த ஆன்மிகம், தேவைன்னா போட்டுக்கலாம் இல்லனா கழட்டிடலாம், கடவுளா என்ன நேரில் வந்தா பார்க்க போறாரு..!!
பக்தியா தன்னை காட்டிக்கொள்கிற யாரும் பக்திமான்கள் கிடையாது, தியானம் செய்பவர்கள் எல்லாம் ஞானிகளும் கிடையாது., உண்மையில் உலகத்துல முக்கால் வாசி பிரச்சனைக்கு காரணமே இந்த அரைகுறை ஆன்மிகவாதிகள் தான்.,
தானும் நிம்மதியா இல்ல, கூட இருக்குறவங்களையும் நிம்மதியா விடறதும் இல்ல எங்க பிரச்சனை வருது னு பாப்போம் கடவுள் பத்தி தேடுவது ஆன்மிகமா? என் வாழிபாடு உயர்ந்தது னு சண்டை போடறது ஆன்மிகமா? கோவிலுக்கு போய், பூஜை அறையில் அமர்ந்து இத கொடு அத கொடு னு விண்ணப்பம் வைக்கிறது ஆன்மிகமா?
பிரச்சனை கடவுள் கிட்டயோ இந்த பிரபஞ்சம் கிடையோ இல்ல உங்க கிட்ட தான் இருக்கு., நம்ம வசதிக்கு ஏற்ற மாதிரி ஆன்மிகத்தை Push Back Seat மாதிரி Use பண்ணிக்கிறோம்.,
இங்க தான் கடவுளின் கருணை வேலை செய்யுது நாம எப்படி Use பண்ணாலும் நம்மை சொகுசா உக்கார வைத்து அழகு பார்க்குது.,
இறைநிலை உணர்வு மயமானது., உணர்ச்சி வசப்படும் நபர்களுக்கு எட்டா கனி தான் தாமரை இலை தண்ணீரிலேயே இருப்பது போலவே நீங்க பக்கத்திலேயே இருந்தாலும் கொஞ்சம் கூட ஒட்டாமல் கூடவே இருக்கும்,
கடவுளை உணர முடியாது., உங்ககிடட இந்த 10 உணர்ச்சிகள் இருக்கா? அப்போ நீங்க முன்னற்றம் அடைய இனொரு ஜென்மம் பொறந்து வரணும் இல்ல எனக்கு இந்த ஜென்மத்திலேயே முன்னேற்றம் வேண்டும் என்றால் இந்த உணர்ச்சிகளை சீர் செய்யணும்
அது என்ன உணர்ச்சிகள்?
1- கோபம்
2- பொறாமை
3 - வஞ்சம்
4- வெறுப்புணர்ச்சி
5- பேராசை
6- முறையற்ற பால் கவர்ச்சி
7- அவசியமற்ற பயம்
8- அவமதிப்பு
9- தற்பெறுமை பேசுதல்
10 - அதிகார போதை
இந்த 10 யும் சரி பண்ண ஒரு Short Cut இருக்கு அது இந்த 10ம் ஆரம்பிக்கும் புள்ளியை சரி செய்வது தான் அது தான் EGO நீங்க எதையோ ஒன்னை நம்பிக்கிட்டு அது தான் சரி னு மத்தவங்க நம்பிக்கையோட சண்டை போடறீங்க.
அவரவர் நிலையில் அவரவர் சரியே னு நினைக்கிறது இல்ல அவங்களுக்கு அனுபவம் பத்தல., சின்ன புள்ள அவனுக்கு என்ன கடவுளை பத்தி என்ன தெரியும்., என் அனுபவத்தில நான் எவ்ளோ பாத்து இருப்பேன் னு என்னைத்தில் ஆழ்ந்தே தன்முணைப்பு உருவாக்கிக்குறீங்க தன்முணைப்புக்கும் ஆன்மிக முன்னேற்றத்துக்கும் சம்மந்தம் இருக்கு.,
தான் தனது என்று எண்ணத்தின் அளவில் நீங்க எல்லை கட்டிட்டு இருந்தால் இறைவன் எப்படி Gate அ தாண்டி உள்ளே வருவான்?
Ego வா? அதலாம் எனக்கு இல்ல னு சொல்றிங்க லா...?
ஒருத்தர்க்கு தன்முனைப்பு அதாவது EGO இருக்கா இல்லையா னு எப்படி கண்டுபிடிக்குறது? மகரிஷி ஓட கவிதை ஒன்னு இருக்கு தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால் சாட்சியுண்டு பேராசை சினம் பொறாமை என்கருத்தும் செயல்களுமே நீதியென்று எண்ணல் பிறர் வருத்தத்தில் இன்பம்காணல் புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார்.
வன்மனத்தோடப் போதும் வெறுப்புணர்த்தும் வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம் - வேதாத்திரி மகரிஷி EGO ஒருத்தர் கிடட இருக்கு னு எப்படி கண்டுபிடிக்கிறது சினம் (கோபம்) பொறாமை இந்த என்னங்கள் & அவங்க செய்யுறது தான் சரி மத்தவங்க சொல்றதும் செய்யுறதும் தப்பு தான் என்ற கருத்தும், மத்தவங்க கஷ்ட பட்டா அதை சொல்லி சந்தோஷ படுவது,Even Meme பாத்து சிரிக்கிறதும் இந்த List ல வரும்,.
வாயிட்டு சொல்லலானாலும் மனசலவில, என்ன எனலாம் சொன்னான் அவனுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும் னு நினைக்கிறது., தப்பான செயல்கள் செஞ்சு உடல் மற்றும் மனதை போதையிலேயே வைத்து இருக்குறது.
, தவறான வழியில் சம்பாதிப்பது,. உழைப்பு சுரண்டல், தன் வேலையை மற்றவர் மேல் சுமத்துவது, கடமை தவறுவது இதல்லாம் இந்த List ல வரும்,. கடைசிசியா மனசுல தவறான எண்ணங்களை ஓட வீட்டுட்டு இருப்பவர்கள் வெறுப்புணர்த்தும் வகையில் முகம் கடுத்திருக்குமாம்,. அவங்க முகத்தில் ஒரு சந்தோஷம் இருக்காது எப்பவும் உர்ர்ர் னு,.
இருப்பாங்களாம் இத தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் னு சொல்லி வைத்தார்கள் போல EGO உங்களுக்கு இருக்கா? உங்க Friends, Family, relative's, எல்லாரும் நியாபகம் வராங்களா...??
அடுத்தவர்களை ஆராய்ச்சி செய்யாதீங்க, புரளி பேசாதீங்க தனியா போய் உட்கார்ந்து அமைதியாக சிந்தித்து மனதை மடை மாற்றுங்கள்.
தன்முனைப்பு உங்களை விட்டு நீங்கினால் அடுத்தடுத்த உணச்சிகள் நீங்க வழி பிறக்கும், நல்ல குருவின் பார்வை படும் ஆன்மிகத்தில் உயர்வு அடைவீர்கள் வாழ்க வளமுடன்..!!!
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |