செய்வினை இருப்பது உண்மையா? செய்வினை யாரை அதிக அளவில் பாதிக்கும்?
இந்த உலகத்தில் எதை எடுத்துக் கொண்டாலும் எல்லாம் இரண்டாக இருக்கிறது. அதாவது நன்மை, தீமை, பிறப்பு, இறப்பு என்று ஒன்றுக்கு இன்னொரு விஷயம் எதிராக இருக்கிறது. அப்படியாக ஒரு நல்ல சக்தி என்று ஒன்று இருந்தால் கட்டாயம் அதற்கு ஒரு தீய சக்தி என்ற ஒரு எதிர்ப்பும் இருக்கும்.
அந்த வகையில் நாம் ஆன்மீக ரீதியாக எந்த அளவிற்கு ஈடுபாடு செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய வாழ்க்கை ஒரு நல்ல நிலைமையில் இருக்கும். ஆனால் ஒரு சிலர் பொறாமையின் காரணமாக குறுக்கு வழியை தேர்ந்தெடுப்பார்கள். அவர்களால் பொறுமையாக நின்று போராடி ஒரு விஷயத்தை சாதிக்க இயலாது.
அவர்கள் நினைத்ததை அன்றே சாதித்து விட வேண்டும் என்ற ஒரு அதிரடியான எண்ணம் இருக்கும். இவ்வாறான நேரங்களில் சிலர் செய்வதறியாமல் தீய வழிகளுக்கு சென்று விடுகிறார்கள். அதில் ஒன்றுதான் செய்வினை.
அதாவது தன்னால் உயர்ந்து முன்னிலைக்கு வர முடியவில்லை என்றாலும் தன்னை சுற்றி உள்ள சொந்தங்கள் அல்லது நண்பர்கள் நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

அவர்களிடம் போராடி ஜெயிப்பதை காட்டிலும் அவர்களுக்கு செய்வினை வைத்து அவர்களை கீழே தள்ள வேண்டும் என்ற ஒரு பொறாமை எண்ணம் சில மனிதர்கள் இடையே இருப்பதை நாம் காண முடிகிறது. ஆக இந்த தீய வழிகளை ஒருவர் கையில் எடுக்கிறார்கள் என்றால் அற்ப ஆசையால் அவர்கள் செய்யக்கூடியது ஆகும்.
அப்படியாக, இவ்வாறு ஒருவர் நாடி செல்லக்கூடிய செய்வினை ஆனது எவ்வாறு செயல்படுகிறது? இந்த செய்வினை உண்மையில் ஒருவர் மீது வைத்தால் அவர்களுக்கு பாதிப்பை கொடுக்குமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.
செய்வினை என்ற ஒரு எண்ணம் ஒருவருக்கு வருகிறது என்றால் அந்த எண்ணம் வந்த நபர் தான் கெட்ட நேரங்களால் சூழப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அதாவது அவர்களை எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பதால் மட்டும்தான் அவர்களை இவ்வாறாக தீய வழியில் சென்று நிறைய விஷயங்கள் செய்யத் தூண்டுகிறது.
இங்கு ஒருவர் செய்வினை வைத்து ஒரு நபரை அழித்து விடலாம் என்று நினைத்தால் செய்வினை வைத்த நபருக்கு கிரகங்கள் சரியில்லாமல் இருக்க ஏதேனும் ஒரு சிறிய பாதிப்புகளை கொடுக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால் மொத்தமாக அவர்களை இவர்கள் நினைத்தது போல் வீழ்த்த முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியாது.

இங்கு ஒருவன் எழுவதும் வீழ்வதும் அவனுடைய கர்ம வினைகளாலும் கடவுளுடைய ஆசிர்வாதத்தாலும் நடக்கக்கூடிய ஒன்றாகும். ஆக இங்கு ஒருவருக்கு வைக்கக்கூடிய செய்வினையானது எவ்வளவு பெரிய அளவில் அவர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த செய்வினை தாக்கமானது வைத்த நபருக்கே சென்று ஒரு தாக்கத்தை கொடுத்து விடும் என்பது தான் உண்மை.
இங்கு நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவர் இருக்க அவர்களை விதி வந்து தாக்கினாலே உண்டே தவிர எந்த ஒரு தீய சக்திகளும் அவர்களை நெருங்க முடியாது. அதனால் இங்கு செய்வினை இவையெல்லாம் பார்த்து அச்சம் கொள்ளாமல் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொள்வதோடு நல்ல எண்ணங்களை கொண்டு பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு பண்போடு பொறாமை குணங்கள் இல்லாமல் வாழ்ந்தால் நூறு வயது வரை வாழ்ந்து விடலாம்.
ஆனால் மனதில் தீய எண்ணங்களை கொண்டு வாழ்ந்தால் செய்வினை வைக்காமல் கூட நம்முடைய வாழ்க்கை அழிந்து விடும் என்பது தான் உண்மை. ஆக ஒரு மனிதன் நன்றாக வாழ்வதற்கு அவனுடைய நல்ல எண்ணங்களும் செயல்பாடும் மட்டும்தான் காரணமாக இருக்கிறது.
அதனால் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய துன்பத்தை கொடுத்தாலும் நல்ல எண்ணம், சொல், செயல் இவை அனைத்தும் கொண்டு நாம் திசை தடுமாறாமல் வாழ்ந்து விட்டோம் என்றால் நிச்சயம் நம் வாழ்க்கையில் விடிவுகாலம் உண்டு. ஆனால் வழி தவறிவிட்டோம் என்றால் கிரகங்கள் நமக்கு நல்ல நிலைமையில் இருந்தாலும் நம்மை காப்பாற்றுவதற்கு யாரும் வர இயலாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |