ஜாதகத்தில் உள்ள தோஷம் இரண்டாவது திருமணத்தின் பொழுது வேலை செய்யுமா?
பொதுவாக, நாம் திருமணத்திற்காக ஜாதகத்தை எடுத்துச் செல்லும் பொழுது அவர்கள் இந்த ஜாதகருக்கு இரண்டு திருமணத்திற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆதலால், முதல் திருமணத்தை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும் என்று நமக்கு பரிந்துரை செய்வார்கள்.
அப்படியாக, என்னதான் நாம் நல்ல நிலையில் கட்டங்கள், கிரகங்களை சரியாக ஆராய்ந்து பார்த்து திருமணம் செய்து வைத்தாலும் இறுதி கட்டங்களில் கிரகங்கள் அதனுடைய வேலையை காண்பித்து விவாகரத்து வரை கூட்டி சென்று விடுகிறது.

அந்த வகையில், முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாவது திருமணம் அவர்கள் செய்கிறார்கள் என்றால் அந்த நேரத்திலும் அவர்களுக்கு ஜாதகத்தில் உள்ள தோஷம் மிகப்பெரிய அளவில் பாதிப்பை கொடுக்குமா என்பதை பற்றி பார்ப்போம்.
அதாவது ஒருவர் ஜாதகத்தில் இருக்கின்றசெவ்வாய் தோஷம் முதல் ராகு கேது தோஷம் உட்பட எல்லா தோஷங்களும் இரண்டாவது திருமணத்தின் பொழுது வேலை செய்யுமா என்று பார்க்கின்ற பொழுது நிச்சயமாக இல்லை. காரணம் முதல் திருமணத்தை விட இரண்டாவது திருமணத்தின் பொழுது அந்த ஜாதகருக்கு சில சாதகமான மாற்றங்கள் நடக்கிறது.
ஆனால், முதல் திருமணத்தில் உள்ள கணவன் பாதி குணாதிசயங்கள் நீங்கள் இரண்டாவது திருமணத்தில் காணலாம். அதை நீங்கள் சமாளித்து செல்லவும் அதைவிட மிகவும் சிறந்த நிலையில் இருக்கக் கூடியதாக தான் நீங்கள் பெறுவீர்கள்.
முதல் திருமணத்தின் பொழுது ஒருவர் சந்தித்த கஷ்டங்கள் இரண்டாவது திருமணத்தில் தொடராதவாறு அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள், அமைதியை கடைப்பிடிக்கிறார்கள்.

ஆதலால், இரண்டாவது திருமணத்தின் பொழுது இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் தோஷம் என்பது வேலை செய்வதில்லை. மேலும், இரண்டாவது திருமணத்திற்கு 9 மற்றும் 11ஆம் இடத்தில் முதன்மையாக பார்க்கிறார்கள் எனவே இரண்டாவது திருமணத்தின் பொழுது இதனை வைத்து பலன் கணிக்கப்படுகிறது.
இதனால் ஏழாம் இடத்தில் உள்ள தோஷங்கள் மிக தீவிரமாக இரண்டாம் வாழ்க்கை பாதிப்பதில்லை என்பது ஒரு விதி உள்ளது. மேலும், இரண்டாவது திருமணத்தின் பொழுது தசா புத்திகள் கட்டாயமாக மாறும். தோஷத்தை கொடுக்கக் கூடிய கிரகங்கள் மற்றும் திசை மற்றும் புத்தி முடிந்து சுப கிரகங்களின் திசை புத்தி நடக்குமானால் இரண்டாவது திருமணம் நிச்சியமாக மிகவும் மகிழ்ச்சியாகவே அமையும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |