சித்தர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு அதிகம் இருக்கும்?
பொதுவாக, நம்மை சுற்றி எல்லோரும் ஒரே எண்ண அலைகளோடு இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் மனதில் வெவ்வேறு விதமான ஆசைகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான நபர்கள் இந்த வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஒரு சிலர் மட்டுமே சித்தர்களைப் போல் வாழ்க்கையின் உண்மை நிலையை அறிந்து பற்றற்ற தன்மையில் வாழ வேண்டும் என்று எண்ணுக்கூடியவர்கள். அந்த வகையில், ஜாதக ரீதியாக யாருக்கு சித்தர்கள் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஒருவருக்கு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் கேது பகவான் அல்லது சனி அல்லது குருவினுடைய தொடர்பு பெற்றாலும் லக்னத்திற்கு 5 சனி கேதுவும் நின்று லக்னாதிபதியை அவர்கள் பார்த்தாலும் லக்னத்திற்கு ஐந்து அல்லது ஒன்பதில் குரு சனி கேது இணைவாக நின்றாலும் அந்த ஜாதகர் ஆன்மீகம், தவம் தியானம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.
இந்த அமைப்பு கொண்ட ஜாதகர் சுமார் 40 முதல் 50 வயதுக்கு மேலாக கேது தசை வந்தால் சித்தர்கள் வழிபாடு செய்து அவர்களைப் போல் பற்றற்ற தன்மையோடு வாழ வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களாக இருப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |