நாம் செய்யும் பரிகாரங்களுக்கு உண்மையில் பலன் உண்டா?
நம்முடைய இந்து மதத்தில் ஜோதிடம் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்க படுகிறது. அதாவது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கோச்சார கணக்கை கொண்டு நாம் கணித்து தற்காத்து கொள்ள முடியும் என்பது நம்பிக்கை.
அப்படியாக, பலருக்கும் ஜாதகத்தில் சில சிக்கல்கள் இருக்கிறது. கெட்ட நேரம் நெருங்க உள்ளது ஆதலால் சில பரிகாரங்களை செய்யுங்கள் என்று ஜோதிடர்கள் பரிந்துரைப்பது உண்டு. அப்படியாக உண்மையில் அந்த பரிகாரங்களுக்கு பலன் உண்டா என்பதை பற்றி பார்ப்போம்.
உதாரணமாக, கேது திசையில் சுக்கிர புத்தியிலும், சுக்கிர திசையில் கேது புத்தி, அஷ்டம சனி காலங்களில், கண்டக சனி காலங்களிலும் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஆதலால் ஜோதிடர்கள் கணவனுக்கு வெளியூர் சென்று வேலை பார்க்கும் வாய்ப்புகள் கிடைத்தால் செல்வது நல்லது என்பார்கள். அதாவது, இடம் மாற்றி இருப்பது அவர்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கும் என்பதால் அதை பரிந்துரைப்பார்கள். உண்மையில் அதுவும் ஒரு பரிகாரம் தான்.
இவ்வாறு செய்ய நிச்சயம் அவர்களுக்கு இடையில் வரும் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியும். ஆக, சரியான நேரத்தில் ஒரு பரிகாரம் செய்ய நாம் கட்டாயம் நமக்கு வரும் பெரும் பாதிப்புகளை தவிர்த்து நாம் நிம்மதி பெறலாம்.
அதோடு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஜோதிடர்கள் எத்தனை கோயில்கள் பாரிந்துரைத்தாலும் அவர்கள் இறுக பற்றி கொள்ளும்படி சொல்வது முருகப்பெருமானைத்தான். காரணம் குழந்தை பிறப்பிற்கு காரகம் குரு.
அதனால் முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்ய அவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நம்முடைய புராணங்கள் எடுத்து கொண்டால் அதில் பல வெற்றிகளை பலரும் தவம் இருந்தும், சில பரிகாரங்கள் தேடியும் முடித்திருப்பார்கள்.
ஆக பரிகாரங்கள் என்பது சாதாரண விஷயமாக கருதாமல், அதை தவமாக எண்ணி முழுமனதோடு எனக்கு ஒரு விஷயம் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக செயல்பட இறைவன் அருளால் நாம் வேண்டியது கிடைக்கும்.
இதற்கு நாம் நிறைய சாட்சிகளை நம் கண் முன்னே காணமுடியும். உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் அவர் தந்தையின் கடுந்தவத்திற்கும், குழந்தை பேறுக்காக செய்த யாகத்தில் கிடைத்த பரிசு என்றே சொல்லலாம்.
ஆக, தெய்வங்களும் சில தவங்கள் செய்து பரிகாரம் செய்தும் சில விஷயங்களை அடைந்தார்கள் என்பது மறுக்க முடியாதது.
அதனால் நாமும் நல்ல ஜோதிடரை நாடி நமக்கு கெட்ட காலம் நெருங்கும் சமயத்தில் அல்லது இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டு நடக்க வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |