சிவ பக்தர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஈசனின் திருவிளையாடல்கள்

By Sakthi Raj Mar 26, 2025 11:41 AM GMT
Report

  சிவன் அவன் கர்ம வினைகளை அறுப்பவர். மனிதனுக்கு ஞானம் போதித்து அக கண்ணை திறப்பவர். ஆனால், அவர் பக்தர்களுக்கு மிகுந்த சோதனையை கொடுத்த பிறகே ஈசனின் கரம் கொடுத்து காப்பாற்றுகிறார்.

அப்படியாக, மதுரையில் ஈசன் நடத்திய திருவிளையாடல் ஏராளம். அந்த ஒவ்வொரு திருவிளையாடலுக்கு பின்னால் நாம் ஈசன் பக்தர்கள் மீது கொண்டு இருக்கும் பாசத்தை பார்க்க முடியும். அந்த வகையில் ஈசன் மதுரையில் நடத்திய திருவிளையாடல்கள் 64. அவை என்னவென்று பார்ப்போம்.

குரு புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி காத்திருக்கிறது

குரு புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி காத்திருக்கிறது

1) இந்திரன் பழி தீா்த்த படலம்.

2) வெள்ளை யானை சாபம் தீா்த்த படலம்.

3) திருநகரம் கண்ட படலம்.

4) தடாதகைப் பிராட்டியாா் திருஅவதாரப் படலம்.

5) தடாதகையின் திருமணப் படலம்.

6) வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.

7) குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்.

8) அன்னக்குழியும் வையையும் அழைத்த படலம்.

9) ஏழுகடல் அழைத்த படலம்.

10) மலையத்துவசனை அழைத்த படலம்.

11) உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்.

12) உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்.

13) கடல்சுவற வேல் விட்ட படலம்.

14) இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்.

15) மேருவைச் செண்டால் அடித்த படலம் .

16) வேதத்துக்குப் பொருளருளிச் செய்த படலம்.

17) மாணிக்கம் விட்ட படலம்.

18) வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்.

19) நான்மாடக் கூடலான படலம்.

20) எல்லாம் வல்ல சித்தரான படலம்.

21) கல்யானைக்குக் கரும்பருத்திய படலம்.

22) யானை எய்த படலம்.

23) விருத்த குமார பாலரான படலம்.

24) கால்மாறியாடின படலம்.

25) பழியஞ்சின படலம்.

26) மாபாதகம் தீா்த்த படலம்.

27) அங்கம் வெட்டின படலம்.

28) நாகமெய்த படலம்.

29) மாயப் பசுவை வதைத்த படலம்.

30) மெய் காட்டிட்ட படலம்.

31) உலவாக்கிழி அருளிய படலம்.

32) வளையல் விற்ற படலம்.

33) அட்டமாசித்தி உபதேசித்த படலம்.

34) விடையிலச்சினையிட்ட படலம்.

35) தண்ணீா்ப் பந்தல் வைத்த படலம்.

36) இரச வாதம் செய்த படலம்.

37) சோழனை மடுவில் வீழ்த்திய படலம்.

38) உலவாக் கோட்டை அருளிய படலம்.

39) மாமனாக வந்து வழக்குரைத்த படலம்.

40) வரகுணனுக்குச் சிவலோகம் காட்டிய படலம்.

41) விறகு விற்ற படலம்.

42) திருமுகம் கொடுத்த படலம்.

43) பலகை விட்ட படலம்.

44) இசைவாது வென்ற படலம்.

45) பன்றிக்குட்டிக்கு பால்கொடுத்த படலம்.

46) பன்றிக்குட்டிகளை மந்திாிகளாக்கிய படலம்.

47) கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

48) நாரைக்கு முக்தி கொடுத்த படலம்.

49) திருவாலவாயான படலம்.

50) சுந்தரப் பேரம்பு எய்த படலம்.

51) சங்கப் பலகை கொடுத்த படலம்.

52) தருமிக்குப் பொற்கிழி யளித்த படலம்.

53) கீரனைக் கரையேற்றிய படலம்.

54) கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்.

55) சங்கத்தாா் கலகம் தீா்த்த படலம்.

56) இடைக்காடன் பிணக்குத் தீா்த்த படலம்.

57) வலைவீசிய படலம்.

58) வாதவூா் அடிகளுக்கு உபதேசித்த படலம்.

59) நாியைப் பாியாக்கிய படலம்.

60) பாியை நாியாக்கி வையை அழைத்த படலம்.

61) பிட்டுக்கு மண்சுமந்த படலம்.

62) பாண்டியன் சுரம் தீா்த்த படலம்.

63) சமணரைக் கழுவேற்றிய படலம்.

64) வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US