குரு புதன் சேர்க்கையால் 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி காத்திருக்கிறது
புதன் மற்றும் குரு இணைவதால் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. அப்படியாக, குரு புதன் சேர்க்கையால் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி சேரப்போகிறது.
இந்த இணைப்பு ஜோதிடத்தில் மிக பெரிய முன்னேற்றத்திற்கான வழியாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எந்த ராசியினர் குரு புதன் சேர்க்கையால் மிக பெரிய அதிர்ஷ்டத்தை சந்திக்க போகிறார்கள் என்று பார்ப்போம்.
துலாம்:
குரு புதன் சேர்க்கையால் இவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய வெற்றியை சந்திக்க போகிறார்கள். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல படிப்பு அமையும். நிதி நிலைமை மேம்படும். போட்டி தேர்வுகள் எழுதும் மாணவர்கள் கட்டாயம் வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்:
குரு புதன் சேர்க்கையால் மிதுன ராசிக்காரர்களுக்கு கடின உழைப்பால் நல்ல வெற்றியை பெறப்போகிறார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் லாபம் அதிகம் கிடைக்கும் காலம். குடும்ப வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை நல்ல முடிவு பெரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இந்த குரு புதன் சேர்க்கை மிக சிறந்த மாற்றத்தை கொடுக்க போகிறது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதில் தெளிவு பிறக்கும். நட்பு வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |