திருமணத்தின் பொழுது மழை பெய்வது அதிர்ஷ்டமா?
நம்முடைய இந்து மதத்தில் சகுனம் என்பது அதிகமாக நம்பி பார்க்கக் கூடிய ஒரு விஷயமாகும். அதாவது ஐந்தறிவு ஜீவராசிகள் தொடங்கி தாவரங்கள் போன்ற இயற்கையின் உடைய அசைவுகளை கூட நாம் சகுனமாக எடுத்து கொண்டு பார்ப்பது உண்டு. அப்படியாக ஒவ்வொரு நிகழ்வின் பொழுது ஏதேனும் சகுனங்கள் நடந்தால் அதற்கான அர்த்தங்களை வைத்து நாம் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் திருமணத்தின் பொழுது மழை பெய்வது அதிர்ஷ்டமா என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாகவே, இந்த திருமண என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பார்கள். அதற்கு காரணம் திருமண இணைவை நாம் உற்று கவனிக்கும் பொழுது சற்று சுவாரசியமாக இருக்கும். அதாவது விதியின் தலையீடு இல்லாமல் கட்டாயமாக ஒரு திருமணம் நடைபெறுவது இல்லை.
ஏதோ ஒரு ஊரில் பிறந்த ஆணிற்கும் ஏதோ ஒரு ஊரில் வளர்கின்ற பெண்ணிற்கும் திருமணம் முடிந்து குழந்தை பிறந்து அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இணைவது என்பது கட்டாயமாக இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு நிர்ணயித்த ஒன்று ஆகும்.
இவ்வளவு அற்புதமான நிகழ்வின் பொழுது மழை பெய்வது என்பது அற்புதமான மற்றும் அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகிறது. மழை என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது. அதனால் திருமண நிகழ்வின் போது மழை பெய்வது என்பது அதிர்ஷ்டமாக சொல்கிறர்கள். மழை என்பது தூய்மை ஆசீர்வாதம் ஒற்றுமை மற்றும் வளமை ஆகியவற்றை குறிக்க கூடியது.
எனவே நம்முடைய வாழ்க்கையில் ஏதேனும் முக்கிய நிகழ்வின் பொழுது மழை பெய்தால் அவை நல்ல சகுனமாக சொல்கிறார்கள். திருமணத்தின் பொழுது மழை நம்மை ஆசீர்வதிப்பதற்காக பெய்ய கூடியது. மழை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அம்சமாகும்.
அதனால் திருமணத்தின் பொழுது பெய்யும் மழை மணமக்களை ஆசீர்வதித்து அவர்கள் ஒற்றுமையாகவும் எல்லா வளத்தோடும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







