செப்டம்பர் 15 நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறதாம்
ஜோதிடத்தில் 9 கிரகங்களின் மாற்றங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்படியாக ஒன்பது கிரகங்களின் தாக்கங்கள் 12 ராசிகளுக்கும் மிக பெரிய மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் ஒரு மனிதனின் மகிழ்ச்சி மற்றும் செல்வ வளத்தை கொடுக்கக்கூடியவர் சுக்கிர பகவான்.
அவர் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைய உள்ளார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிக பெரிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அந்த வகையில் எந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.
மேஷம்:
சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்கு அவர்கள் வாழ்க்கையில் பொருளாதார நிலையை உயர்த்த போகிறது. சிலருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். குடும்பத்துடன் பொழுது போக்கு விஷயங்களில் கலந்து கொள்வீர்கள். சிலருக்கு வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும் காலம். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்:
சுக்கிரனின் இந்த பெயர்ச்சி சிம்ம ராசிக்கு அவர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலில் ஏற்பட்ட உபாதைகள் விலகும். தங்கை வழி உறவால் சில உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். முன்னோர்கள் வழிபாடு மேற்கொள்வீர்கள். சிலருக்கு திடீர் பண வரவால் வாங்கிய கடன் பிரச்சனை விலகும். சிலருக்கு வேலை மாற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்கு சுக்கிரனின் இந்த பெயர்ச்சி அவர்கள் வாழ்க்கையில் மிக பெரிய முன்னேற்றத்தை கொடுக்க போகிறது. சிலருக்கு தொழில் ரீதியாக நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். நினைத்த சம்பளம் கிடைக்கும். கடன் பிரச்சனை விலகும் அற்புதமான காலம் ஆகும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு சாதகமான பலன் கொடுக்கும். உறவுகள் இடையே ஏற்பட்ட விரிசல் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







