மகாளய பட்ச காலத்தில் மறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் வாங்கி விடாதீர்கள்
மகாளய பட்ச காலம் என்பது மிகவும் முக்கியமான காலமாகும். இந்த காலத்தில் நம் குடும்பங்களில் இறந்த முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து சிரார்த்தம் திதி போன்றவை கொடுப்பதாகும். மேலும் மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதால் நமக்கு ஏற்பட்ட பித்ரு தோஷங்கள் விலகுகிறது.
அதோடு இறந்த நம் முன்னோர்களுக்கு நம் மீது ஏதேனும் கோபங்கள் இருந்தாலும் அவை குறைந்து ஆசீர்வாதம் வழங்குகிறார்கள். அப்படியாக மகாளய பட்ச காலங்களில் நாம் மறந்தும் இந்த ஐந்து பொருட்களை மட்டும் வாங்கி விடக்கூடாது என்கிறார்கள். அவை நம்முடைய முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. மகாளய பட்ச காலங்களில் தங்கம், வெள்ளி மற்றும் அழகு சாதனபொருட்கள் ஆடம்பர பொருட்களை நாம் கண்டிப்பாக வாங்க கூடாது. இந்த 15 நாட்களும் எளிமையான வாழ்க்கையை மட்டும் நாம் வாழ வேண்டும்.
முன்னோர்களை மனதில் நிறுத்தி வழிபாடு செய்யவேண்டும். அவர்களுக்கான சடங்குகள் செய்வதற்கான பொருட்களை வாங்கி முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கான அனைத்து பணிகளையும் நாம் செய்ய வேண்டும்.
2. மகாளய பட்ச காலகட்டத்தில் கட்டாயம் நாம் சொத்துக்களும் வாகனங்களும் வாங்க கூடாது. அவை மிகப்பெரிய ஒரு தீமையை விளைவிக்கும். அதாவது மறைந்த முன்னோர்களுக்காக நாம் நம்முடைய நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கான மரியாதையையும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான வழிபாடுகளை செய்தல் தான் இந்த மகாளய பட்ச காலமாகும்.
இந்த நேரத்தில் நாம் அவர்களை மறந்து நமக்கு தேவையான பொருட்கள் மீதும் ஆடம்பர பொருட்கள் மீதும் கவனம் செலுத்தும் பொழுது அவை அவர்களின் கோபத்திற்கு ஆளாக்கி நமக்கு சில தோஷங்களை உண்டு செய்கிறது.
3. அதேபோல் ஷூ பெல்ட் அல்லது தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இவை எதிர்மறை ஆற்றலுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. அதனால் பித்துருக்கள் கோபம் அடைவார்கள் என்று சொல்வதால் இந்த காலகட்டத்தில் இந்த பொருட்களை வாங்குவதை நாம் முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.
4. மேலும் மகாளய பட்ச காலங்களில் புதிய ஆடைகளை வாங்குவதையும் நாம் கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டங்களில் நம்முடைய சந்தோஷத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் நம்முடைய முன்னோர்களுக்காக நம்முடைய நேரத்தை செலவிட்டு அவர்களை சந்தோஷப்படுத்துவதற்கான வழிபாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







