சனிப்பெயர்ச்சி அன்று பிறக்கும் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?
இன்று திருக்கணித முறைப்படி சனிப்பெயர்ச்சி (29-03-2025) நடக்க இருக்கிறது. ஆனால், வாக்கியப்பஞ்சாங்கத்தின்படி 6.3.2026 அன்று தான் சனிப்பெயர்ச்சி நடக்க இருக்கிறது. இந்தப் பெயர்ச்சியில் சனிபகவான், பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதம் கும்பம் ராசியில் இருந்து, பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீனம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
மீனம் குருவின் வீடு ஆகும். அங்கு செல்லும் சனி பகவான் அடுத்த இரண்டரை ஆண்டுகள் அங்கேயே தான் இருக்கிறார். அப்படியாக, பலரும் இந்த சனிப்பெயர்ச்சிக்காக காத்திருந்தாலும், சிலருக்கு ஒரு வித அச்சம் உண்டாகிறது.
காரணம் சனி பகவான் தான். இவ்வளவு முக்கியான சனி பெயர்ச்சி நாளில் குழந்தை பிறந்தால் நன்மையா? தீமையா? எப்படி இருக்கும் என்று ஒருவகை குழப்பம், பயம் உண்டாகும். அந்த வகையில் சனிப்பெயர்ச்சி நாளில் பிறக்கும் குழந்தையின் குண நலன்கள், மற்றும் வாழ்க்கை முறை எப்படி அமையும் என்று பார்ப்போம்.
அப்படியாக, மார்ச் 29ஆம் தேதி கிரகங்கள் ரீதியாக மிக பெரிய மாற்றம் நடக்க இருக்கிறது. அதாவது அன்று தான் சூரிய கிரகணம், சனிப்பெயர்ச்சி என பல மாற்றங்கள் இருப்பதால் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.
மீன ராசிக்கு செல்லும் சனி ஏற்கனவே அங்குள்ள சந்திரன், சுக்கிரன், ராகு, சூரியன், புதன் ஆகியோரை சந்திக்கிறார். இதனால், அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும். இது இன்று பிறந்த குழந்தைகளை பாதிக்குமா என்றால் கட்டாயம் பாதிக்காது.
இந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த ஆன்மீக சிந்தனையோடும், இரக்க குணத்தோடும் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த கலை திறனுடனும், படைப்பாற்றல் கொண்டும் பிறக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அதனால், இந்த நாளில் பிறக்கும் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவார்கள் அச்சம் தேவை இல்லை என்கிறர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |