இறைவனை விட காலம் பெரிதா?

By Sakthi Raj Jan 30, 2025 09:00 AM GMT
Report

இந்த உலகிலும் ஒருவர் வாழ்விலும் காலம் மிக பெரிய பங்கு வகிக்கிறது.காலம் தான் ஒரு மனிதனுக்கு எதை வழங்க வேண்டும்?எதை எந்த நேரத்தில் தடுக்க வேண்டும்?என்று சரியாக ஆராய்ந்து முடிவு செய்கிறது.ஏன்?ஒரு மனிதனின் பிறப்பையும் இறப்பையும் காலம் தான் உறுதி செய்கிறது.அப்படியாக இறைவனை விட உயர்ந்ததா காலம்?அல்லது காலம் தான் இறைவனா?ஒளிந்து இருக்கும் ரகசியம் பற்றி பார்ப்போம்.

அவன் அருளால் உலகம் இயங்குகிறது என்பதை அனைவரும் நம்புகின்றோம்.அப்படியாக அவன் வழியாக நம்முடன் உரையாடுவது தான் காலம்.அந்த காலம் ஆனது இறைவன் கட்டளைக்கு இணங்க அதனுடைய வேலை செய்கிறது.

இறைவனை விட காலம் பெரிதா? | Does Time Greater Than God

அதனால் தான் "பொறுத்தால் பூமி ஆழ்வார்" என்று சொல்லுவார்கள்.காலம் போன்று ஒருவனுக்கு நல்லதும் கெட்டதும் ஒருவர் உணர்ந்திட முடியாது. அதாவது எவ்வளவு அழுதாலும்,தவம் செய்தாலும் அதற்கான உரிய காலம் வராமல் எதுவும் நடப்பதில்லை.

அதே போல் ஒரு விஷயம் காலம் கடந்து நடக்கும் பொழுது ஏன் இத்தனை நாள் நாம் நினைத்த காரியம் கடந்து போனது என்று விடையும் சேர்த்தே கொடுத்து விட்டு செல்கிறது காலம்.

வீட்டில் புத்தர் சிலையை பூஜை அறையில் வைக்கலாமா?

வீட்டில் புத்தர் சிலையை பூஜை அறையில் வைக்கலாமா?

 

மேலும்,இறைவன் ஒரு மனிதனுக்கு ஒரு விஷயம் கிடைக்கும் முன் அதை அவன் கையாளும் பக்குவத்தையும்,அதை இழந்தால் அவன் மனம் தேற்றும் பக்குவமும் கற்று கொடுத்த பிறகே அந்த பொருள் அவனை அடைய செய்கிறார்.

இறைவனை விட காலம் பெரிதா? | Does Time Greater Than God

இறைவன் பார்வையில் எல்லோரும் அவன் குழந்தைங்களே.அவர் ஒவ்வொரு உயிர்க்கும் பொறுப்பானவர்.இதை உணர்ந்தாலே நாம் அனைவரும் சமம் என்ற உணர்வு வந்து விடும்.அதே போல் ஒருவர் வாழ்க்கையில் அவர்கள் செய்த பாவ பலனும்,கர்ம வினைகளுக்கு முடியும் முன் அந்த உயிர் இந்த உலகை விட்டு பிரிவதில்லை.

ஆக,எத்தனை பெரிய இடர்களை சந்தித்தாலும் இறைவனை நம்புவது போல் காலத்தை நம்புங்கள்.சரியான நேரத்தில் நீங்கள் தேடும் விடையை காலம் உங்களுக்கு எதோ வழியில் கொடுத்து விடும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US