நாய்களுக்கும் கர்மாவுக்கும் என்ன தொடர்பு? யார் வீட்டில் நாய் கட்டாயம் வளர்க்க கூடாது?
ஆதி காலங்களில் இருந்தே வீடுகளில் நாய் வளர்ப்பது என்பது கடைபிடிக்கக் கூடிய ஒரு நடைமுறையாகும். அந்த வகையில், பலரும் வீடுகளில் நாய்கள் வளர்க்கின்ற பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் இருக்கும்.
மேலும், அந்த நாய்கள் நம்முடைய கர்ம வினையுடன் தொடர்புகளுக்கு ஏற்றார் போல் கிடைக்கிறது என்றும் அவை நம்முடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்கிறது என்றும் ஒரு பக்கம் கருத்து உள்ளது.
அந்த வகையில், நாய்களுக்கும் நம் கர்ம வினைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யார் வீடுகளில் நாய் வளர்க்கலாம்? வளர்க்க கூடாது? என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக, நாய் என்பது கால பைரவரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், வீடுகளில் பெண் பிள்ளைகள் இருந்தால் நாய்களை வளர்க்கலாம். ஆண் பிள்ளைகள் மட்டும் இருக்கின்ற வீடுகளில் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. இவை கர்ம ரீதியாக ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
மேலும், நாய்களை தனியாக வளர்க்காமல் ஜோடியாக ஆண் மற்றும் பெண் நாய் என்று வளர்ப்பது நல்லது. அதேபோல், ஒரு மருமகன் மாமியார் வீட்டோடு சேர்ந்து வசிக்கக்கூடிய நிலை இருந்தால் நாய் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அவை பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அதோடு, செல்ல பிராணிகளுக்கு பெயர் வைக்கும் போது உரிமையாளர்களின் ஜாதகம் அல்லது பிறந்த தேதியுடன் பொருந்தி வருமாறு வைப்பதே சிறந்தது. வீடுகளில் கருப்பு நிற நாய்களை வளர்க்கும் பொழுது எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் நம்மை நெருங்குவதில்லை. ஆனால், தூய பழுப்பு நிற நாய்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடும்.
ஆதலால், அதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள். மேலும், நாய் வளர்க்கும் போது நாம் என்னென்ன விஷயங்களை பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த காணொளியில் பார்ப்போம்.