இந்த 5 பொருட்களை கோவிலுக்கு தானம் செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனையும் தீருமாம்

By Sakthi Raj Dec 23, 2025 09:35 AM GMT
Report

ஆலய வழிபாடு எப்பொழுதும் நமக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கொடுக்கும். அதிலும் ஆலய பணிகளில் ஈடுபடும் பொழுது அவை நமக்கு ஒரு மிகப்பெரிய நல்ல வாய்ப்புகளை வாழ்க்கையில் உருவாக்கி கொடுக்கிறது.

அதாவது, கோவில்களில் நடக்கக்கூடிய உழவாரப்பணிகளில் ஈடுபடலாம் அல்லது கோவில்களுக்கு  பொருட்களை நம்மால் முடிந்தவற்றை தானம் செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது நம்முடைய தலைமுறையினர் மிக சிறப்பாக வாழ்வார்கள் என்று சொல்லுகின்றனர்.

அப்படியாக கோவிலுக்கு நாம் இந்த ஐந்து பொருட்களை தானம் கொடுப்பதால் நிச்சயம் நம் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள் அதை பற்றி பார்ப்போம்.

இந்த 5 பொருட்களை கோவிலுக்கு தானம் செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனையும் தீருமாம் | Donating This 5 Things To Temple Bring Good Luck

இந்த எண்ணில் பிறந்தவர்கள் 35 வயதில் விஐபி ஆவது உறுதி

இந்த எண்ணில் பிறந்தவர்கள் 35 வயதில் விஐபி ஆவது உறுதி

1. கோவில்களில் அன்னதானம் நடப்பது வழக்கம். அந்த அன்னதானத்திற்கு நம்மால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி கொடுக்கலாம். அரிசி போன்ற தானிய வகைகள் அல்லது நம் வீடுகளில் சமைத்த உணவுகளை கூட கோவில்களில் அன்னதானம் வழங்கலாம்.

இவ்வாறு ஒருவருடைய பசியை போக்கும் பொழுது நம்முடைய கர்ம வினையானது கழியும் என்று ஆன்மீக ரீதியாக மிகவும் நம்பக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

2. கோவில்களை சுற்றி நிறைய ஏழை எளிய மக்கள் இருப்பதை நாம் காண முடியும். அவ்வாறு வசிக்கும் மக்களுக்கு நிச்சயம் நம்மால் முடிந்த ஆடை தானம் செய்யலாம். இவ்வாறு செய்யும் பொழுது நிச்சயம் நம்முடைய பாவங்கள் ஆனது குறைந்து ஒரு நல்ல வழி பிறக்கும்.

3. கோவில் என்றாலே சுவாமியும் அங்க ஏற்றக் கூடிய தீபங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியாக கோவில்களுக்கு நாம் எண்ணெய் அல்லது நெய் தானமாக வழங்கலாம்.

இவ்வாறு வழங்கும்பொழுது நமக்கு ஒரு நல்ல அதிர்ஷ்டத்தை பெற்றுக் கொடுக்கும். நம்முடைய குடும்பங்களில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அவை எல்லாம் விலகி ஒரு நல்ல அமைதியான சூழல் உருவாக்கி கொடுக்கும்.

இந்த 5 பொருட்களை கோவிலுக்கு தானம் செய்தால் எப்பேர்பட்ட பிரச்சனையும் தீருமாம் | Donating This 5 Things To Temple Bring Good Luck

வைகுண்ட ஏகாதசி விழா.., திருப்பதியில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

வைகுண்ட ஏகாதசி விழா.., திருப்பதியில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

4. தானங்களில் ஒரு மிகச்சிறந்த தானமாக பசு தானம் பார்க்கப்படுகிறது. எவர் ஒருவர் பசுவை கோவிலுக்கு தானமாக வழங்குகின்றாரோ, அவருக்கு நிச்சயம் வாழ்நாளில் துன்பமே இல்லை. இறைவனுடைய மனதில் அந்த மனிதனுக்கு எப்பொழுதும் இடம் உண்டு. ஆக பசுவை நீங்கள் தானமாக வழங்கும் பொழுது அந்த பலன் உங்கள் குடும்பத்தை வாழ்நாள் முழுவதும் நின்று காப்பாற்றும்.

5. முடிந்தவரை வீடுகளில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கும் ஆன்மீகப் பணியை நாம் சிறுவயதில் இருந்து கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும். இவ்வாறு கோவில்களில் நடக்கக்கூடிய ஆன்மீகப் பணிகளில் நாம் கலந்து கொள்ளும் பொழுது நம்முடைய மனமானது தூய்மை அடையும். ஆக இவ்வாறு செய்யக்கூடிய சேவையும் நம்மை பல துன்பங்களிலிருந்து காப்பாற்றுகிறது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US