ருத்ராட்சம் அணிந்தவர்கள் மறந்தும் இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்யாதீர்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் ருத்ராட்சம் என்பது சிவபெருமானுக்கு தொடர்புடையதாக பார்க்க படுகிறது. மேலும், எவர் ஒருவர் ருத்ராட்சம் அணிகிறார்களோ அவர்கள் மனதளவிலும் உடல் அளவிலும் தூய்மை அடைவதாக சொல்லப்படுகிறது.
அப்படியாக, ருத்ராட்சம் அணிபவர்கள்வாழ்க்கையில் கட்டாயம் ஒரு சில விஷயங்களை பின் பற்ற வேண்டும் என்கிறார்கள். அதிலும் குறிப்பாக ருத்ராட்சம் அணிபவர்கள் கட்டாயம் ஒரு சில விஷயங்களை தவறியும் செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
ருத்ராட்சம் அணியும் பொழுது அவர்களுக்கு இயற்கையாவே நேர்மறை ஆற்றல் உண்டாகி, வரும் ஆபத்துகளில் இருந்து காப்பதாக சொல்கிறார்கள். அதோடு ருத்ராட்சம் அணிபவர்கள் மனதில் தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் என்றும் அவர்கள் இறைவழிபாட்டில் அதிக முழு மனதோடு ஈடுபாடு செய்ய உதவியாக இருப்பதாக சொல்கிறர்கள்.
மேலும், ருத்ராட்சத்தை எல்லோரும் அணியலாமா என்ற சந்தேகங்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் அணியலாமா என்ற சந்தேகம் இருக்கும். கட்டாயம் ருத்ராட்சத்தை வயது வேற்றுமை இல்லாமல் எல்லோரும் அணியலாம்.
இந்த ருத்ராட்சத்தை கருப்புநிற கயிற்றில் அணியக்கூடாது. ஆனால் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய கயிற்றில் அணியலாம். மேலும், ருத்ராட்சத்தை நாம் எப்பொழுதும் அணிந்து இருக்கலாம். அதை எப்பொழுதும் கழட்ட வேண்டும் என்பது இல்லை.
நாம் ருத்ராட்சத்தை கழட்டி வைப்பது அவ்வளவு நன்மை அல்ல. ஆதலால் கட்டாயம் எப்பொழுதும் நாம் எல்லா நேரத்திலும் நாம் ருத்ராட்சம் அணியலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







