சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்த தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து பயணித்து வருகிறார்.
இந்த கிரகங்களுடன் சுக்கிரன் சேர்ந்து பல ராஜயோகங்களை ஏற்கனவே உருவாக்கியுள்ளார். இந்நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி சுக்கிரன் ப்ளூட்டோவுடன் சேர்ந்து த்வி துவாதஷ் யோகத்தை உருவாக்கவுள்ளார்.

இதனால் சக்திவாய்ந்த யோகமானது சுமார் 248 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலனைப் பெறவுள்ளனர்.
ரிஷபம்
நல்ல வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கையில் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மீனம்
வசதிகள் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல துறைகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும். மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.