கஷ்டங்களும் தோஷங்களும் விலக எளிய 8 பரிகாரங்கள்
அன்றாட வாழ்க்கையில் நமக்கு துன்பம் வருவது இயல்பு என்றாலும் அந்த துன்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்க நமக்கு இருக்க கூடிய ஒரே வழி இறைவழிபாடு தான். இறைவழிபாட்டின் வழியாக நாம் எதையும் சாதிக்கலாம், எதையும் மாற்றலாம்.
அப்படியாக, தீராத துன்பம் மற்றும் கடன் பிரச்சனை போன்ற பாதிப்புகளால் நாம் கஷ்டப்படும் பொழுது செய்ய வேண்டிய எளிய 8 பரிகாரங்கள் பற்றி பார்ப்போம். இந்த பரிகாரங்களை நாம் மனதார செய்து வழிபாடு செய்யும் பொழுது கஷ்டங்களும் தோஷங்களும் விலகுகிறது.
1. தீராத துன்பங்கள் நம் குடும்பத்தை நெருங்கும் பொழுது அருகில் இருக்கும் ஆலயம் சென்று நாம் தொடர்ந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் பொழுது நாம் சந்திக்கும் துன்பங்கள் அனைத்தும் விரைவில் விலகி செல்லும்.
2. சிலருக்கு நேரம் சரி இல்லை என்றால் கடன் வாங்க வைத்து அந்த கடன் அவர்கள் கழுத்தை நெருக்கி விடும். அப்படியாக, கடன் நம்மை வதைக்கும் பொழுது ஸ்ரீ யோக நரசிம்மரையும், லட்சுமி நரசிம்மரையும் வழிபாடு செய்யும் பொழுது விரைவில் கடன் தொல்லை விலகும்.
3. பில்லி சூனியம் எதிர்மறை பாதிப்புகள் இவை அனைத்தும் நரசிம்மரை வழிபாடு செய்வதால் விலகுகிறது.
4. அம்மன் ஆலயங்களில் இருக்கக்கூடிய திரிசூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபாடு செய்ய எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் செய்வினை கோளாறுகளும் நம்மை விட்டு விலகும்.
5. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்க வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சந்தோஷமாக வாழ்வார்கள்.
6. செவ்வாய் பகவானுக்கு உரியவர் முருகப்பெருமான். இவரை தொடர்ந்து செவ்வாய் கிழமை வழிபாடு செய்து வர நினைத்த வேலை கிடைக்கும்.
7. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாள் கோயிலில் கருடாழ்வார் சந்நிதியில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய தோஷம் யாவும் விலகும்.
8. மேலும், ஜாதகத்தில் எப்பேர்ப்பட்ட கிரக தோஷம் இருந்தாலும் சுந்திர காண்டம் பாராயணம் செய்து வர நம் தோஷம் வேலை செய்யாமல் போகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







