உங்களை கோடீஸ்வரராக மாற்றும் சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள்
நம்முடைய வாழ்க்கையில் நம்மை மீறி ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பல நேரங்களில் உணர்ந்து கொள்ளலாம். அப்படியாக, எவ்வளவு உழைத்தும் கைகளில் பணம் தங்கவில்லை என்று மனம் வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
கையில் பணம் தங்க விலை என்று வருத்தம் கொள்ளாமல் அதை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி சிந்தித்தும் இறைவனை வழிபாடு செய்தும் நாம் முயற்சி செய்யும் பொழுது நிச்சயம் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கிறது.
அந்த வகையில் வாழ்க்கையில் முன்னேற்றமும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விலகும் சம்பாதிக்கக்கூடிய பணம் கைகளில் தங்கவும் நாம் செய்யவேண்டிய சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்கள் பற்றி பார்ப்போம்.

பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை அன்று கடையில் நறுமணம் மிக்க தாழம்பூ குங்குமத்தை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று அந்த குங்குமத்தை அம்மன் ஆலயத்திற்கு சென்று தானமாக வழங்க வேண்டும்.
இது நம்முடைய வீட்டிற்கு சுபிட்சத்தை உண்டாக்கும். அதேபோல் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வந்தாலும் வாழ்க்கையில் உள்ள தடைகள் யாவும் விலகும்.
2. மேலும், தொடர்ந்து ஐந்து வாரங்களில் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் சன்னதிக்கு சென்று மல்லிகை பூ அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வருவது நம் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமையும். இதனால் வீடுகளில் உள்ள பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாக குறைந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

3. அதேபோல் வளர்பிறையில் வரக்கூடிய சித்திரை நட்சத்திரத்தன்று காமாட்சி அம்மனுக்கு பட்டுப் புடவை சாற்றி மனம் உருகி வழிபாடு செய்தாலும் நமக்கு தலைக்கு மேல் இருக்கக்கூடிய கடன் பிரச்சினை விலகி நம் வாழ்க்கையில் செல்வ செழிப்பு உண்டாகும்.
4. தினமும் காலையில் குளித்துவிட்டு துளசி செடிக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தாலும் குடும்பத்தில் மகாலட்சுமியின் பரிபூரண அருளால் நல்ல மாற்றமும் பொருளாதார முன்னேற்றமும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |