சனிபகவானை சாந்தப்படுத்தும் எளிய முக்கிய பரிகாரங்கள்

By Sakthi Raj Jul 12, 2026 08:58 AM GMT
Report

சனிபகவான் ஒருவர் செய்த தவறுகளை நினைத்து அதற்கு வருந்தி திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகள் கொடுக்கக் கூடியவராக இருக்கிறார். சனிபகவான் தான் 9 கிரகங்களில் நீதிமானாகவும் தர்மத்தின் தலைவனாகவும் விளங்க கூடியவர்கள்.

ஆகையால், ஒருவர் நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் செயல்பட்டு விட்டால் சனி பகவான் அவர்களுக்கு உயரத்தையே கொடுக்கிறார்.

அப்படியாக, ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் நமக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் வருவதை நாம் பார்க்க முடிகிறது. அந்த காலகட்டங்களில் பலரும் பல பரிகாரங்களை தேடிச் செல்வார்கள்.

அப்படியாக, இவ்வாறான கடின காலகட்டங்களில் நாம் அன்னதானம் செய்வது சனி பகவானுடைய மனதை குளிர் செய்கிறது. அதைப்போல் சிவ வழிபாடும் இவர்களுக்கு நற்பலன்களை கொடுக்கும்.

12 ராசிக்காரர்கள் மனதில் இடம் பிடிக்க இப்படி பேசினாலே போதுமாம்.. என்ன தெரியுமா?

12 ராசிக்காரர்கள் மனதில் இடம் பிடிக்க இப்படி பேசினாலே போதுமாம்.. என்ன தெரியுமா?

குறிப்பாக சிவபெருமானுடைய நாமங்களை சொல்லி வழிபாடு செய்வது இவர்களுக்கு எல்லா பாதிப்புகளிலும் விடுதலையை பெற்றுக் கொடுக்கும்.

ஜாதகத்தில் சனிபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து விட்டால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும். எட்டாம் இடத்தில் இருந்தால் பெண்களுக்கு களத்திர தோஷம் உண்டாகிறது. இவர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் ஏழை எளிய பெண்களுக்கு மனதார உதவி செய்கின்ற பொழுது அந்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

மேலும், சனிக்கிழமை மாலை நேரத்தில் நவகிரகங்களை வழிபாடு செய்வதும் நல்ல பலன்களை கொடுக்கும். மேலும், சனி பாதிப்பிலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US