குருவின் ஆட்டம் ஆரம்பம்.. ஜூலை 19க்கு பிறகு இந்த ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்
ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாக கருதக்கூடிய குருபகவானின் பார்வை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. குரு பார்வை கோடி நன்மை என்று சொல்வார்கள். எப்பேற்பட்ட துயரமாக இருந்தாலும் குருவினுடைய பார்வை இருக்க நாம் அந்த துயரத்தில் இருந்து விடுபடலாம்.
அதேபோல், குரு பார்வை இருக்க பெயர், புகழ், பதவி, அந்தஸ்து என்ற உயர் செல்வாக்கினை நாம் அடையலாம். அந்த வகையில், ஜூலை 19ஆம் தேதி குரு பகவான் பூச நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்குள் செல்கிறார்.
இந்த நட்சத்திர பெயர்ச்சி பொருளாதார முன்னேற்றம் மற்றும் அதிர்ஷ்டத்தை வாரி வழங்க போகிறது. இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மை காத்திருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு குருபகவான் உடைய இந்த பெயர்ச்சியானது பொருளாதாரத்தில் இவர்களுக்கு நிலையான தன்மையை கொடுக்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெற போகிறார்கள்.
முடங்கி கிடந்த பணம் இவர்கள் கைகளுக்கு வந்து சேர போகிறது. எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வெளிநாடுகளில் இவர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்:
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதார நிலையானதாக இருக்கப்போகிறது. தொழில் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் தொழிலை நீங்கள் வளர்ச்சி படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகி புத்துணர்ச்சி அடையும். நேர்மறையான சிந்தனைகளால் எதையும் எளிதில் சாதித்து விடுவீர்கள்.
தனுசு:
இந்த ராசியின் அதிபதி குரு பகவான். ஆதலால், இவர்கள் இந்த காலகட்டங்களில் அமோகமான வாழ்க்கையை வாழ போகிறார்கள், மன ரீதியாக முடங்கி கிடந்த தனுசு ராசியினர் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையை வளர்த்துக் கொள்ளப் போகிறார்கள், கடின உழைப்பிற்கான அங்கீகாரம், இவர்களை அவதூறாக பேசியவர்கள், ஏளனமாக பார்த்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டக்கூடிய அற்புதமான கால அமைப்பாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |