வீடுகளில் உள்ள பிரச்சனைகள் தீர செய்ய வேண்டிய 10 எளிய பரிகாரங்கள்
மனிதர்கள் வாழ்வில் பிரச்சனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், என்னதான் நம் பிரச்னை ஒரு நாள் கட்டாயம் முடிவிற்கு வந்துவிடும் என்று மனதிற்கு தெரிந்தாலும் அந்த இக்கட்டான கால நிலையில் இருக்கும் பொழுது மிகவும் கடினமாகவும் மன உளைச்சலை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும்.
அந்த நேரத்தில் நமக்குஇருக்க கூடிய ஒரே ஆறுதல் இறை வழிபாடு மட்டுமே. மேலும் அந்த காலகட்டங்களில் நம்முடைய வீடுகளில் இறைவழிபாடு செய்யும் பொழுது நிச்சயமாக நாம் ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய மாற்றத்தை காணலாம். என்றோ ஒருநாள் முடிவிற்கு வர வேண்டிய பிரச்சனை நிச்சயம் வெகு விரைவில் நொடிப் பொழுதில் முடிவிற்கு வருவதையும் நாம் காண முடியும்.
இதற்கெல்லாம் நாம் இறை வழிபாட்டில் செலுத்துகின்ற பிரார்த்தனையும், நாம் அந்த நேரத்தில் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிகாரங்களும் காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில் வீடுகளில் தீராத பிரச்சனையை சந்தித்து கொண்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு சில எளிய பரிகாரங்களை பார்ப்போம்.

1.நம்முடைய வீடுகளில் தீய சக்திகளின் நடமாட்டம் அல்லது எதிர்மறை ஆற்றல் சூழ்ந்து இருப்பதாக எண்ணினால் அரச மரத்தடியில் இருக்கக்கூடிய மண்ணை எடுத்து வந்து அதனை ஒரு துணியில் முடிந்து நிலை வாசலில் கட்டி தொங்கவிடலாம்.
2. வீடுகளில் காரணமே இல்லாமல் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருகிறது என்றால் வன்னி மரத்தின் உடைய குச்சிகளை எடுத்து நிலை வாசலில் வைத்தால் சண்டைகள் விரைவில் தீரும்.
3. வீடுகளில் நீண்ட நாள் பொருளாதார சிக்கல்களை சந்தித்து கொண்டிருப்பவர்கள் வெள்ளிக்கிழமையில் ஒரு தட்டில் மருதாணி இலைகளை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் மகாலட்சுமியின் அருளால் கஷ்டங்கள் விலகும்.
4. பிள்ளைகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைப்பதற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் விநாயகருக்கு கற்பூரவள்ளி இலையில் மாலை தொடுத்து வழிபாடு செய்தால் நிச்சயம் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
5. வியாபாரத்தை விரிவு செய்யவும் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறவும் புதன்கிழமை அன்று அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தால் வியாபாரம் பெருகும்.

6. மிகப்பெரிய அளவில் கடன் தொல்லையில் பாதிக்கப்பட்டவர்கள் வன்னி மர குச்சிகளை எடுத்து வந்து வீட்டிற்கு முன்பு புதைத்து வைத்தால் கட்டாயமாக ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும்.
7. திங்கட்கிழமை அன்று அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தால் உங்களுடைய மனதில் நினைத்த காரியம் வெகு விரைவில் நிறைவேறும்.
8. வீட்டு வாசலுக்கு நேராக மா மரம் அல்லது முருங்கை மரம் வைத்து வளர்த்தால் வீட்டிற்கு தீங்கை விளைவிக்கும்.
9. வீடுகளில் பொருளாதாரம் சிறந்து விளங்குவும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கவும் வீட்டிற்கு முன்பாக வெற்றிலை கொடியை நட்டு வைத்து வளர்க்கலாம்.
10. நீங்கள் வேப்பமரம் நட்டு வைக்கிறீர்கள் என்றால் அது நன்றாக வளரும் வரை அதை வெட்டக்கூடாது மீறி அதை வெட்டினால் நம்முடைய நிம்மதி கெடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |