படுக்கை அறையில் சுவாமி படங்கள் வைக்கலாமா? இதைத் தெரிந்து கொள்ளுங்கள்
வீடுகளில் தனியாக பூஜை அறை அமைத்து அங்கு சுவாமி படங்கள் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஆசை கொள்வார்கள். ஆனால் எல்லாருக்கும் தனியாக வீடுகளில் பூஜை அறை வைக்கக்கூடிய வசதிகள் இருப்பதில்லை. அப்படியாக அவர்கள் வசதிக்கு ஏற்ப தங்களுடைய இருப்பிடங்களில் பூஜை செய்வதற்கான பொருட்களை ஒரு மேஜையில் வைத்து அவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தங்களுடைய படுக்கை அறையில் சுவாமி படங்களை வைத்து வழிபாடு செய்யலாமா? வாஸ்து ரீதியாக சொல்வது என்ன என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக வாஸ்து ரீதியாக ஒவ்வொரு அறைகளுக்கும் ஒவ்வொரு விதிமுறைகள் இருக்கிறது. அந்த வகையில் படுக்கை அறையில் நாம் பூஜை பொருட்களை வைக்கக்கூடாது.

காரணம் படுக்கையறை என்பது நிம்மதியாக உறங்குவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் உள்ளது. இங்கு நாம் பூஜை பொருட்களை வைத்து பூஜை செய்யும் போது நம்முடைய எண்ண அதிர்வலைகள் சில நேரங்களில் சிரமத்திற்கு உள்ளாகலாம் என்பதற்காக இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் வசதியின்மை காரணமாக ஒரு சிலருக்கு படுக்கை அறையில் தான் சுவாமி படங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தால் கட்டாயமாக அவர்கள் ஒரு சில விதிமுறைகளை பின்பற்றி செய்யலாம் என்கிறார்கள். படுக்கையறையில் சுவாமி படங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் வடகிழக்கு திசையில் வைத்து பூஜை செய்யலாம்.

மேலும் வைக்க கூடிய இடமானது மிகவும் வெளிச்சமாக இருக்க வேண்டும். அதோடு நம்முடைய பாதங்கள் அந்த திசையை நோக்கி இருக்கும் வகையில் நாம் உறங்குவது கூடாது. அது மட்டும் அல்லாமல் அந்த இடத்தை எப்பொழுதும் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
மேலும் படுக்கை அறையில் ஒரு சிறிய இடத்தில் பூஜை பொருட்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் கட்டாயமாக மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
அதனால் தான் பூஜை அறைக்கு எப்பொழுதும் தனியாக ஒரு இடம் ஒதுக்கி வழிபாடு செய்ய வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முடியாத பட்சத்தில் எந்த இடங்களில் வைத்து வழிபாடு செய்யமுடிகிறதோ அங்கு வைத்து சில விதிமுறைகளை பின்பற்றி பூஜை செய்யலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |