துளசி செடியுடன் சேர்த்து இந்த ஒரு மரத்தை வைத்தால் பண மழை கொட்டுமாம்
நாம் வசிக்கும் இடமும் தொழில் செய்யும் இடமும் வாஸ்து ரீதியாக சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு நம்முடைய எண்ண ஓட்டங்களும் தொழில் வளர்ச்சியும் நல்ல விதத்தில் அமையும்.
மேலும் சில இடங்களில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதை நாம் சரி செய்வதற்கான சில பரிகாரங்கள் செய்து கொள்ளலாம். அந்த வகையில் நம் வீடுகளில் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடன் தொல்லை இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்து குறைபாடுகள் அல்லது நேரம் சரியில்லாமல் காரணமாக இருக்கலாம்.
அவ்வாறான நேரத்தில் நமக்கு இருக்கக்கூடிய ஒரே ஆறுதல் இறைவழிபாடு மட்டும்தான். நாம் இறைவழிபாடு செய்யும்பொழுது துன்பங்களும் தோஷங்களும் படிப்படியாக குறைந்து நல்ல வாழ்க்கையை பெற முடியும். அப்படியாக இந்து மதத்தில் துளசி மிகவும் புனிதமான ஜோடியாக கருதப்படுகிறது.

எவர் ஒருவர் வீடுகளில் துளசி செடி வைத்திருக்கிறார்களோ அவர்கள் வீடுகளில் கட்டாயம் மகாலட்சுமியின் அருள் இருக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் நம்முடைய வீடுகளில் பிரதான நுழைவாயில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல்களோடு இருக்க வேண்டும்.
அங்கு ஏதேனும் வாஸ்து குறைபாடுகள் அல்லது எதிர்மறை ஆற்றல்கள் சூழ்ந்து இருந்தால் நம் வீட்டிற்கு நல்ல ஆற்றல்கள் வருவதற்கான ஒரு தடையை உண்டு செய்கிறது. இவ்வாறு வீடுகளில் வாஸ்து பிரச்சனையை சந்திப்பவர்கள் வீட்டு நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் வாழை மரத்தையும் மறுபுறத்தில் துளசி செடியையும் வைக்கும் பொழுது அவர்கள் நல்ல அதிர்வலைகளை பெற முடிகிறது.
அதாவது வாழை மரத்தில் விஷ்ணு பகவானும் துளசியில் மகாலட்சுமியும் வசிப்பதாக நாம் போற்றி வழிபாடு செய்கிறோம். இந்த இரண்டு செடிகளையும் நாம் வீடுகளில் வைக்கும் பொழுது இவர்களுடைய அருள் நமக்கு கிடைத்து வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய தடைகள் யாவும் விலகுகிறது.

மேலும் நம் வீடுகளில் தொடர்ந்து சிக்கல்கள் அல்லது பொருளாதார இழப்புகள் வருகிறது என்றால் நம்முடைய வீடுகளை பராமரிப்பதில் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது வீடுகளில் எப்பொழுதும் உடைந்த பொருட்கள் மற்றும் அசுத்தமான நிலையில் இல்லாத ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.
முடிந்தவரை வீடுகளை எப்பொழுதும் பிரகாசமான ஒரு நிலையில் விளக்குகளை ஏற்றி வெளிச்சமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். வீடுகளில் இருட்டு சூழ எதிர்மறை ஆற்றல்கள் மிக எளிதாக நம் வீட்டிற்குள் வந்துவிடும்.
ஆக காலை மாலை நேரங்களில் வீடுகளில் விளக்கேற்றி மற்றும் சாம்பிராணி தூபங்கள் போட்டு பராமரிப்பு செய்து கொள்வது அவசியம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நம் வீடுகளில் நிச்சயம் நல்ல மாற்றங்களை காணலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |