உங்கள் ஜாதகத்தில் சனி வீட்டில் இந்த கிரகம் இருந்தால் கட்டாயம் இது நடக்குமாம்
ஜோதிடத்தில் சனிபகவானுடைய வீடாக இருக்கக் கூடிய மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் சனி பகவான். இவர்கள் வீட்டில் மற்ற கிரகங்கள் அமர்ந்தால் அந்த ஜாதகருக்கு என்ன மாதிரியான பலன்கள் இருக்கும் என்று பார்ப்போம்.

1. சூரியன்:
சனிபகவானும் சூரிய பகவானும் மகன் தந்தை உறவு கொண்டவர்களாக இருந்தாலும் இவர்கள் பகை கிரகங்களாக கருதப்படுகிறார்கள். சனி வீட்டில் சூரியன் அமரும் பொழுது ஜாதகருக்கு தந்தையுடன் சில கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த அமைப்பு கொண்டவர்கள் கடுமையான உழைப்பிற்குப் பிறகு மிகப் பெரிய அளவில் உயரத்தை தொடுவார்கள்.
2. சந்திரன்:
மனோ காரகனாக இருக்கக்கூடிய சந்திரன், சனியின் வீட்டில் அமரும் பொழுது இது புனர்பூ தோஷத்தை கொடுக்கிறது. இந்த அமைப்பு ஜாதகருக்கு சில நேரங்களில் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் கொடுக்கிறது. ஒரு சிலர் மந்தமான நிலையில் காணப்படுவார்கள். இருப்பினும் இவர்கள் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களாகவும் எதையும் கூர்மையாக கவனிக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
3. செவ்வாய்:
சனிபகவானுடைய வீடுகளில் செவ்வாய் அமரும் பொழுது இது ஒரு சவாலான அமைப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் மகர ராசியில் செவ்வாய் பகவான் உச்சம் பெறுகிறார். இது ருச்சக யோகம் எனப்படும் சிறந்த அமைப்பை உருவாக்குகிறது.
இதனால் ஜாதகர் அதிக அளவில் ஆற்றலும் துணிச்சலும் நல்ல நிர்வாக திறனும் கொண்டவராக இருப்பார். அதேசமயம் சனியின் பிடிவாதமும் செவ்வாய் பகவானின் ஆக்ரோஷமான குணமும் முரட்டுத்தனமான குணத்தை ஜாதகருக்கு கொடுத்து விடும்.
4. புதன்:
சனி இருவரும் நட்பு கிரகங்களாக இருக்கிறார்கள். ஆதலால் சனியின் வீட்டில் புதன் அமரும் பொழுது அந்த ஜாதகருக்கு மிகச்சிறந்த அறிவுத்திறனும் வணிக நுணுக்கங்களையும் சிறப்பாக கொண்டிருப்பார்கள். இவர்கள் கணக்கு வழக்கு எழுத்து மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவார்கள். எந்த ஒரு கருத்தையும் ஆதாரத்துடன் பேசக்கூடிய குணம் இவர்களிடத்தில் இருக்கும்.
5. குரு:
குரு பகவான் மகர ராசியில் நீசம் அடைகிறார். இதனால் ஜாதகருக்கு ஆரம்ப காலங்களில் ஆன்மீக சிந்தனைகளில் சில குழப்பங்கள் இருந்தாலும் நாளடைவில் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்வார்கள். இந்த அமைப்பு கொண்டவர்கள் நேர்மையான முறையில் கடினமாக உழைத்து செல்வத்தை சேர்ப்பார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |