எலுமிச்சையில் ஒரு மூடியில் குங்குமம்,மறுமூடியில் மஞ்சள் தடவி வைப்பது ஏன்?
அம்மன் கோயில் திருவிழாக்களில் சாமியாடிகளுக்கு அருள் வருவதற்காக எலுமிச்சை பழத்தை பிழிவார்கள். பொதுவாக எலுமிச்சை பழத்தை தேவகனி என்றும் தெய்வ கனி என்றும் அழைப்பார்கள்.
எலுமிச்சை பழம் நல்ல சக்தியை பெற்று தீய சக்தியை ஏவிவிடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோயில்களில் இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல சக்தியை கொடுக்கின்றன.
இதே வீடுகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை கெட்ட சக்தியை ஒழித்துவிட்டு நேர்மறை சக்தியை அதிகரிக்கிறது.
அது போல் இந்த எலுமிச்சைக்கு வேத மந்திரங்களை உள்ளே கிரகித்துக் கொள்ளும் சக்தியும் உண்டு. இந்த எலுமிச்சை பழங்கள் நல்ல காரியங்கள் கை கூட உதவுகிறது.
தெய்வ வழிபாட்டில் இந்த எலுமிச்சையை கொண்டு மாலையாக சாத்தும் பழக்கமும் உண்டு. துர்க்கை அம்மன், பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களுக்கு இந்த எலுமிச்சை மாலை சாத்துவார்கள்.
உக்கிர தெய்வங்களான துர்க்கை, பத்ரகாளி ஆகிய தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாத்துவதால் நீண்ட நாள் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும் என்று சொல்வதுண்டு.
அது போல் துர்க்கைக்கு ராவுகாலத்தில் எலுமிச்சையால் விளக்கு ஏற்றினாலும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். திருஷ்டிக்காகவும் இந்த எலுமிச்சை பழத்தை வீட்டு வாசலில் கட்டுவார்கள்.
அதாவது எலுமிச்சை பழத்துடன் பச்சை மிளகாய் சேர்த்து கட்டுவார்கள். சிலர் எலுமிச்சை பழத்துடன் காய்ந்த மிளகாயையும் வைத்து கட்டுவார்கள்.
இவற்றை கட்டுவதால் கெட்ட சக்திகள் வெளியே சென்றுவிடும் என்பது ஐதீகம். அது போல் வீட்டு வாசலில் இரு புறமும் எலுமிச்சை பழத்தை சரிபாதியாக வெட்டி ஒன்றில் மஞ்சளும் மற்றொன்றில் குங்குமமும் தேய்த்து எடுத்து வைக்க வேண்டும்.
இதனால் வீட்டுக்கு வருவோர் அந்த எலுமிச்சை பழத்தை பார்த்தாலே அவர்கள் கவனம் அதில் ஈர்க்கப்பட்டுவிடும். அதனால் திருஷ்டி ஏற்படாது.
எலுமிச்சை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இந்த எலுமிச்சை பழம், மனிதனின் ஆயுள் காலத்தை நீட்டிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |