மாதவிடாய் நேரத்தில் "கருப்பு" பொட்டு அவசியமா?
பெண்கள் அழகு என்றால் அவர்கள் நெற்றியில் போட்டு வைப்பது கூடுதல் அழகு.ஆக வீட்டில் பெண்களை எப்பொழுதும் சிவப்பு நிற பொட்டுக்களோ இல்லை வேற நிற போட்டு வைத்து பார்த்திருப்போம்.
ஆனால் கருப்பு நிற போட்டு வைத்து பார்ப்பது அரிது .அதாவது ஒருவர் கருப்பு நிற போட்டு வைக்க அது அவர்களுக்கு எதிர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பது ஜோதிட சாஸ்திர ரீதியாகவும் சொல்ல படுகிறது.
மேலும் வீடுகளில் பெண்கள் கருப்பு நிற போட்டு வைப்பதை ஆதரிப்பது இல்லை. ஆனால் மாதவிடாய் சமயத்தில் கருப்பு பொட்டு வைத்து கொள்ளலாம்.
இதன்காரணமாக, துஷ்ட சக்திகள் அந்த நேரங்களில் அணுகாமல் நம்மை பாதுகாக்கிறது.
பொதுவாக பிற நாட்களை காட்டிலும் மாத விடாய் காலங்களில் பெண்கள் சோர்ந்து காணப்படுவர்.அந்த வேளையில் தீய சக்திகள் நம்மை நெருங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஆதலால் அந்த வேளைகளில் ஒருவர் கருப்பு நிற போட்டு வைக்க அது அவர்களை தீய சக்திகள் மற்றும் எதிர்மறை ஆற்றலிடம் இருந்து நம்மை காப்பாற்றுகிறது.
அதேபோல, கணபதி ஹோமத்திற்கு யாக சாலையிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலையும், நெய்யையும் கலந்து தயாரிக்கப்பட்ட கரிபிரசாதத்தை நெற்றியில் வைத்து கொள்ளலாம்.
ஆனால், கோயில்களில் விளக்குகளில் காணப்படும் கருப்பு கரியை நெற்றியில் வைத்துக் கொள்ள கூடாதாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |