வாஸ்து: உங்க வீடுகளில் இந்த செடிகள் இருந்தால் உடனே அகற்றி விடுங்கள்
நம் வீடுகளில் வளர்க்கக்கூடிய மரங்கள் என்பது நம் வீட்டின் அழகை கூட்டுகிறது என்பதை தாண்டிலும் வாஸ்துரீதியாகவும் நமக்கு நன்மை தீமைகளை வழங்க கூடியதாக இருக்கிறது.
அதாவது வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளில் வளர்க்கக்கூடிய மலர்கள், செடி, கொடிகள் இவை அனைத்தும் நம் வீட்டிற்கு எதிர்மறை மற்றும் தீய ஆற்றல்களை கொடுத்து நம்முடைய பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை இவை அனைத்திலும் ஒரு தாக்கத்தை உண்டு செய்கிறது.
அதனால் நமக்குப் பிடித்தது என்று நம் வீடுகளில் நினைத்த மரம் செடி கொடிகளை வளர்க்க கூடாது. அப்படியாக வாஸ்து ரீதியாக எந்த செடிகளை வீடுகளில் வளர்க்கக்கூடாது என்று பார்ப்போம்.

1. முற்கள் இருக்கக்கூடிய செடிகளை வளர்க்க கூடாது. ஆனால் ரோஜா செடியை தவிர்த்து மற்ற முற்கள் நிறைந்த செடியை வளர்க்கக்கூடாது. காரணம் இந்த செடிகளை நம் வீடுகளில் வைக்கும் பொழுது நம் குடும்ப சூழ்நிலையில் ஒரு சில குழப்பங்களை உண்டு செய்கிறது.இவை உறவினர்களுக்கு இடையே பிரிவு பொருளாதாரத்தில் ஒரு தடைகளை கொடுத்து நம் அமைதி நிலையை கலைக்க கூடியதாக உள்ளது.
2. அதைப்போல் போன்சாய் தாவரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் இதை நம்ம எக்காரணத்தை கொண்டும் வீட்டிற்குள் வைத்து வளர்க்கக்கூடாது. வீட்டிற்கு வெளியே தோட்டம் அல்லது மாடியில் கூட இந்த செடிகளை வளர்க்கலாம். நாம் வீட்டிற்குள் கொண்டு வந்து அழகுக்காக வைக்கும் பொழுது நிச்சயம் இவை குடும்பத்தில் இருக்கக்கூடிய பொருளாதாரத்தில் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

3. அதைப்போல் சில காட்டு மல்லிகை போன்ற அதிக நறுமணம் கொண்ட தாவரங்களையும் வீட்டிற்குள் வைத்து வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காரணம் ஒரு நல்ல இதமான மனம் கொண்ட செடி என்பது நம் ஆற்றலை இன்னும் மேன்மைப்படுத்த கூடியதாக இருக்கும்.
ஆனால் ஒரு அதிக அளவிலான வலுகொண்ட ஒரு நறுமணம் கொண்ட தாவரங்கள் நம் வீடுகளில் வைக்கும் பொழுது நம்மை அறியாமல் எரிச்சல், அமைதி இன்மை போன்ற ஒரு சூழலை ஏற்படுகிறது.
அதனால், மார்க்கெட்டில் அதிக அளவிலான வித்தியாசமான செடிகள் இருக்கிறது என்று நாம் அதை வாங்கும் ஆர்வத்தில் வாஸ்துவை பார்ப்பதற்கு என்றும் தவற விடக்கூடாது. காரணம் வாஸ்துவால் நிறைய முன்னேற்றமும் சிக்கல்களும் நமக்கு காத்திருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |