குழந்தை வரம் அருளும் துளசி மாதா
ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசியின் மகாத்மியம் ஒன்று சொல்லப்பட்டு உள்ளது.
தசரத மகாராஜனுக்கு குழந்தைப்பேறு வேண்டி அவன் முதன்முதலில் பட்டத்து ராணிகளோடு துளசி பூஜை செய்ததாகவும் துளசி தேவியே நேரில் தோன்றி துளசி காஷ்டம் என்ற துளசி குச்சிகளை கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய், உனக்கு பகவானே மகனாக பிறப்பான் என்று வரம் கொடுத்ததாகவும் இருக்கிறது.
எனவே துளசி வழிபாடு என்பது சகல பாவங்களையும் போக்குவது மட்டுமல்ல குழந்தை வரத்தையும் தருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது.
மகப்பேறு இல்லாத தம்பதியினர் துளசி வழிபாடு செய்தால் நல்ல பலனை கைமேல் பெறுவார்கள். துளசி பூஜை செய்யும் போது மிகவும் கண்டிப்பாக ஸ்ரீகிருஷ்ணன் ஆக கருதப்படும் நெல்லி மரத்தின் கிளையை அருகில் வைத்து செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக பூஜை செய்யப்படும் போது நெல்லி மரக்கிளை வாடிவிடும் என்பதனால் ஸ்ரீ கிருஷ்ணனின் திருவுருவப்படமும் பிரதிமையோ வைத்து பூஜை செய்யலாம். நீங்களும் தினசரி துளசி வழிபாடு செய்து பாருங்கள்.
மனதில் மகிழ்ச்சியும் இல்லத்தில் இன்பமும் வாழ்வில் ஒருவித தெம்பும் கிடைப்பதை கண் கூடாக காணலாம். துளசி மாதா உங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தருவாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |