சிலர் ஒரு ரூபாயாக இருந்தாலும் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுடன் பார்த்து பார்த்து செலவழிப்பார்கள்.
ஜோதிடத்தின்படி பண விஷயங்களில் அதிக சிக்கனமாகவும் அல்லது கஞ்சத்தனத்துடன் நடந்து கொள்ளும் ராசிகள் எதெல்லாம் பார்ப்போமா..?

ரிஷபம்
பிறர் செலவுகளுக்கு உதவுவது அல்லது பில்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்ற விஷயங்களுக்கு அதிகம் யோசிப்பார்கள். குழுவாக எங்காவது சென்றால் முதல் ஆளாக பணத்தை எடுத்து நீட்ட மாட்டார்கள். பணத்தை வெளியே எடுப்பதில் மிகவும் யோசித்து, எச்சரிக்கையுடன் செயல்படுவார்கள்.
கன்னி
தாங்கள் செய்யும் ஒவ்வொரு செலவையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். அனாவசியமான செலவுகளை தவிர்த்து விடுவார்கள். பொருட்களானாலும், உணவானாலும் சரி தேவைக்கேற்ப மட்டுமே வாங்கி செலவு செய்வார்கள்.
விருச்சிகம்
நிதி சார்ந்த விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவார்கள். அனாவசிய செலவுகளை தவிர்ப்பதற்காக பயணங்கள் மற்றும் விருந்துகளை தவிர்ப்பார்கள்.
மகரம்
ஒரு பெரிய செலவு செய்வதற்கு முன்னர் அதன் நன்மை, தீமைகளை முழுமையாக ஆராய்வார்கள். இவர்களின் தீவிர சேமிப்புப் பழக்கம் சிலருக்கு கஞ்சத்தனமாக தோன்றலாம். புத்திசாலித்தனமான முதலீடுகளில் ஈடுபடுவார்கள்.