முருகப்பெருமானின் ஆறுமுகத்தின் தத்துவங்கள் தெரியுமா?
கலியுக வரதன் முருகப்பெருமான் பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடியவர். இவர் கண்கண்ட தெய்வம் என போற்றுவதற்கு காரணம், மக்களுடைய துயரை அவர்கள் சொல்லும் முன் துடைத்து விடுகிறார்.
அப்படியாக முருகப்பெருமான் ஆறு முகங்கள் கொண்டு அருள் பாலிக்கிறார். அந்த ஆறுமுகங்கள் பின்னாலும் ஒவ்வொரு தத்துவங்கள் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் – அக்னிக்கு,
மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்முகம் – பிரம்மனுக்கு,
ஐந்து முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் – கந்தனுக்கு.
மேலும், நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் முருகப்பெருமானின் ஆறுமுகத்தை பற்றி கூறுவதாவது,
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
அதே போல் முருகப்பெருமானின் ஸரவணபவ – என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்)கொண்டது. இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும்.இந்த மந்திரத்தின் மகிமை
ஸ – லக்ஷ்மிகடாக்ஷம்
ர – ஸரஸ்வதி கடாக்ஷம்
வ – போகம் – மோக்ஷம்
ண – சத்ருஜயம்
ப – ம்ருத்யுஜயம்
வ – நோயற்ற வாழ்வு
இந்த மந்திரத்தை கூறுவதால் நாம் முருகன் அருளால் வாழ்க்கையில் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |