எந்த கிழமைகளில் விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்
விரதம் நம்முடைய இந்துக்களில் கடைபிடித்து வரும் முக்கிய வழிபாடு ஆகும்.மேலும் விரதம் என்பது ஒரு வகையான தவம்,தியானம் என்றே சொல்லலாம்.அதாவது நாம் முழுமனதோடு இறைவனை பிராத்தனை செய்து அவரை அடைய ஒரு விரதம் வழியாகும்.
அப்படியாக நாம் இருக்கும் ஒவ்வொரு விரதத்திற்கு ஒவ்வொரு பலன்கள் உண்டு.அந்த வகையில் எந்த கிழமையில் விரதம் மேற்கொள்வதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
செவ்வாய் கிழமை விரதம்:
கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த மாதம் ஆகும்.அதிலும் கார்த்திகையில் வரும் செவ்வாய்கிழமை முருகப்பெருமானுக்கு மிக சிறந்த நாளாகும்.முருகனை சரண் அடைந்தால் நம்மை கை பிடித்து நல்லது கெட்டது எல்லாவற்றிலும் உடன் இருந்து வாழ்க்கை பாதையை வழிநடத்த உதவியாக இருப்பார்.
மேலும் தேவை இல்லாத பிரச்சனைகள்,எதிரிகளால் தொல்லை ஏற்படும் பொழுது முருகன் நமக்கு பக்க பலமாக இருந்து நம்முடைய பயத்தை போக்கி வெற்றி பெறச்செய்வார்.
அப்படியாக தீராத பிரச்சனை,மன கஷ்டம் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் செவ்வாய் கிழமையில் முருகப்பெருமான் ஆலயம் சென்று வழிபாடு செய்வதும்,வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி விரதம் மேற்கொண்டு வழிபட்டால் முருக பெருமான் மனம் இறங்கி உங்கள் கண்ணீரை துடைப்பார்.
புதன் கிழமை விரதம்:
குழந்தைகளுக்கு படிப்பு என்பது மிக முக்கியம்.சில குழந்தைகள் மிகவும் சுட்டியாக இருப்பார்கள்.அவர்களை ஒருமுகப்படுத்தி படிக்கச் வைப்பது என்பது கடினமான காரியம் ஆகும்.ஆக புதன் கிழமையில் ஸ்ரீ மகா விஷ்ணுவை சரண் அடைய செய்வது என்பது சிறந்த பலன் கொடுக்கும்.
மேலும் மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி,நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கார்த்திகை மாதம் ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு வரப்பிரசாதம்.
அன்றைய தினத்தில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்றும் வீட்டின் பூஜை அறையில் உள்ள பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்வதும் புத்தி கூர்மை,குழந்தைகளுக்கு படிப்பில் இருக்கும் விளையாட்டுகுணம் விலகும்.
வெள்ளிக்கிழமை விரதம்:
ஒரு மனிதனை தூங்க விடாத ஒரே பிரச்சனை கடன் தான்.பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டால் நம்முடைய நிம்மதியை இழந்து விடுவோம்.அப்படியானவர்கள் கட்டாயம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய அவர்களுக்கு நல்லதோர் மாற்றம் கிடைக்கும்.விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது என்பது பெற முடியாத பலனையும் பெற முடியும்.
சனிக்கிழமை விரதம்:
மனிதனுக்கு இயல்பாகவே மரணம் பற்றிய பயம் அதிகம் இருக்கும்.அவன் சந்தோஷமாக இருந்தாலும் ஏதேனும் இழப்புகள் நடந்து விடுமோ என்ற அச்சம் இருக்கும்.ஆக நாம் எல்லோருமே சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சர்பங்களை வழிபட்டு வரலாம்.
அவ்வாறு செய்ய நமக்கு உண்டான சிறு சிறு தடங்கல் எல்லாம் விலகும்.சனிக்கிழமை தோறும் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய ராகு, கேதுகளுக்கு கார்த்திகை மாதத்தில் தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும் அப்படி செய்தால் மரண பயம் நோய் தோற்று விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |