சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த முக்கிய வழிபாட்டு பொருட்கள்
மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுளாவார்.
இவர் அழித்தல் வேலையை செய்பவர். அவரது வேலைக்கு ஏற்ப மிகவும் கோபக்கார கடவுளாகவே சிவபெருமான் பலராலும் அறியப்படுகிறார்.
ஆனால் உண்மையில் சிவபெருமான் தீயவர்களுக்கு ருத்ரமூர்த்தி, ஆனால் அவருடைய பக்தர்களுக்கு சாந்தமூர்த்திதான்.
சிவபுராணத்தில் சிவபெருமானுக்கு அவரின் துதிபாடும் மந்திரங்கள் பிடிக்குமென கூறப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு வெண்கல பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொண்டு சிவமந்திரங்களை கூறிக்கொண்டே சிவனுக்கு அபிஷேகம் செய்வது அவருடைய உக்கிரத்தை அணைப்பதோடு நம் வாழ்விலும் அமைதியை கொண்டுவரும்.
அதேபோன்று, சிவபெருமானுக்கு சில பொருட்களை வைத்து வழிபட்டால் பிடிக்காது உதாரணத்திற்கு மஞ்சள், குங்குமம், கேதகை மலர் போன்றவை.
ஆனால் சில பொருட்கள் அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும்.
எனவே சிவருமானை வழிபடும்போது அதுபோன்ற பொருட்களை வைத்தே வழிபடுங்கள்.
சிவபெருமானுக்கு பிடித்த பொருட்கள்
- குங்குமப்பூ
- சர்க்கரை
- பன்னீர்
- தயிர்
- பசு நெய்
- பால்
- சந்தனம்
- தேன்
- வில்வ இலை