சனியுடன் சுக்கிரன் உண்டாக்கும் தசாங்க யோகம்.. 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்
குருவின் ஆதிக்கத்தை பெற்ற மீன ராசியில் தற்போது சனி பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார். அவர் நாளை சுக்கிர பகவானுடன் 37 டிகிரி கோண தொடர்பை உருவாக்க இருக்கிறார். இந்த தாக்கம் மிகவும் வலிமையான தாக்கமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. இந்த தாக்கம் "தசாங்க யோகத்தை" உருவாக்க இருக்கிறது.
ஒருவருடைய வாழ்க்கையில் தொழில் வளர்ச்சி, வருமானம், லாபம், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி போன்றவற்றை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. உருவாக இருக்கின்ற இந்த " தசாங்க" யோகமானது குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொடுக்க போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

கடகம்:
கடக ராசியினருக்கு இந்த யோகமானது அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. வியாபாரத்தில் அவர்கள் செய்கின்ற முதலீடுகளுக்கு இவர்கள் நல்ல லாபத்தை பெறப்போகிறார்கள்.
எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை இவர்கள் முன்னதாகவே அமைத்துக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு உருவாகும். உடல் ரீதியாக பின்னடைவு சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
கும்பம்:
நீண்ட நாட்களாக முடிவிற்கு வராத காரியங்கள் இப்பொழுது ஒரு நல்ல முடிவை பெறும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாழ்க்கை அமையும். உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
வீட்டில் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும். வேலையில் இருந்த பழு படிப்படியாக குறையும். உங்களுடைய விடாமுயற்சியால் நீங்கள் நினைத்ததை சாதிக்கக்கூடிய அற்புதமான காலகட்டம். பெற்றோர்கள் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த காலகட்டமானது வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கப்போகிறது. குலதெய்வத்தினுடைய பரிபூரண அருளை பெறுவீர்கள். வேலையில் நீங்கள் நினைத்தது போல் பதவி உயர்வு கிடைக்கப் போகிறது.
வேலையில் உங்களுக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பண தட்டுப்பாடு இருக்கிறது என்று மன வருத்தத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கப்போகிறது. வங்கி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் விலகி ஒரு நல்ல மன அமைதியான நிலையில் வாழ போகிறீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |