இன்றைய ராசி பலன்(04.02.2025)

Report

மேஷம்:

இன்று காலை முதல் மனதில் சிறு குழப்பம் தோன்றும்.முக்கியமான முடிவுகள் எடுக்க தாமதம் ஆகலாம்.நண்பர்கள் ஆலோசனை பெறுவதால் மனம் தெளிவடையும்.நிதானமாக இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

நீங்கள் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.ஒரு சிலருக்கு மதியம் மேல் எதிர்பார்த்த வேலைகள் கிடைக்கும்.உறவினர்களால் நற்செய்தி கிடைக்கும்.நன்மையான நாள்.

மிதுனம்:

பிறர் மனதை புரிந்து செயல்படுவது அவசியம் ஆகும்.உங்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துவதால் நினைத்ததை சாதிப்பீர்கள்.அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும்.அமைதி காக்க வேண்டிய நாள்.

கடகம்:

உங்கள் மனக்குழப்பம் விலகும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.நினைத்ததை இன்று நடத்தி முடிப்பீர்.உங்கள் மனக்குழப்பம் விலகும்.

சிம்மம்:

நீண்ட நாள் தடைபட்ட வேலை நடக்கும்.வியாபாரத்தில் சரியான முடிவை எடுக்க தாமதம் ஆகலாம்.பெற்றோர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.இறைவனை தரிசனம் நன்மையை தரும்.

உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமா?இவரை பற்றி கொள்ளுங்கள்

உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமா?இவரை பற்றி கொள்ளுங்கள்

கன்னி:

திட்டமிட்டு செயல்படுவதால் வேலை நடந்தேறும். பிறரை அனுசரித்துச் செல்வதால் விருப்பம் பூர்த்தியாகும்.சந்திராஷ்டமம் தொடர்வதால் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவாக செயல்படுவது நல்லது.

துலாம்:

மனதில் இறைநம்பிக்கை அதிகரிக்கும்.பழைய பிரச்சனைகள் எல்லாம் முடிவிற்கு வரும்.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.விலகி சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள்.

விருச்சிகம்:

இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.எதிர்பார்த்த பணம்வரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றி தரும்.

தனுசு:

மனதில் மிக பெரிய தைரியம் உண்டாகும்.எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தவிர்க்க முடியாத நம்பிக்கை தோன்றும்.பிடித்த வேலைகளை செய்வதால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:

வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.பண நெருக்கடி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்:

மனதில் உள்ள உங்கள் விருப்பம் நிறைவேறும்.நீண்ட மாதங்களாக எதிர்பார்த்து காத்து இருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும்.புதிய நண்பர்கள் அறிமுகம் ஆதாயமாக அமையும்.

மீனம்:

குடும்பத்தில் உண்டான பிரச்சன்னை ஒன்று முற்றிலுமாக முடிவிற்கு வரும்.எதையும் ஒருமுறைக்கு பல முறைக்கு மேல் யோசித்து செயல்படுவதால் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US