சனி இவ்வளவு நன்மை செய்யுமா? பலரும் அறிந்திடாத சனி பகவானுடைய சிறப்பு தகவல்கள்...

By Sakthi Raj Oct 14, 2026 01:00 PM GMT
Report

சனிபகவான் என்றாலே எல்லோரும் பயந்து விடுவது உண்டு. அதாவது, சனி பகவானுடைய காலகட்டங்களில் அவர் கொடுக்கக்கூடியது கஷ்டம் மட்டுமே என்று பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், சனிபகவான் நமக்கு நிறைய நன்மைகளும் கொடுக்கிறார். அதை பற்றிய சிறப்பு தகவல்களை பார்ப்போம்.

ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல நிலையில் அமர்ந்து விட்டார் என்றால் அந்த நபர் பெரிய அரசியல் தலைவராக கூடிய யோகம் கிடைக்கும். அதே போல், ஒரு ராசியை சனி பகவான் கடக்க சுமார் ரெண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

அதேபோல், ஒருவருக்கு நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடியவரும் சனி பகவான் தான். ஒருவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப சரியான பதிலடி கொடுப்பவரும் சனி பகவான் தான். காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததால் சனீஸ்வரர் என்ற பட்டத்தை பெற்றார்.

சனி இவ்வளவு நன்மை செய்யுமா? பலரும் அறிந்திடாத சனி பகவானுடைய சிறப்பு தகவல்கள்... | Few Good Things We Must Know About Sani Bagavan

இரவு நேரங்களில் நாய் அழுதால் என்ன நடக்கும் தெரியுமா?

இரவு நேரங்களில் நாய் அழுதால் என்ன நடக்கும் தெரியுமா?

மேலும், தினமும் சிவபெருமானை வழிபாடு செய்பவருக்கு சனி பகவான் மிகப்பெரிய அளவில் பலன்களை கொடுக்கிறார். ஒருவருக்கு பிறமொழி பேசக்கூடிய புலமை, மருத்துவத் துறையில் புகழ் ஆகியவற்றையும் சனி பகவானே தருகிறார்.

சனிஸ்வர பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி சனிக்கிழமை வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோய்களும் விலங்குகிறது. தினமும் காகத்திற்கு சாதமிட்டு வந்தால் சனி தோஷம் விலகி சனிக்கிழமைகளில் அணுமனை வழிபாடு செய்தால் சனி பாதிப்பு வருவதே இல்லை. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US