உலகிலேயே முதன்முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட கோயில் : எங்கு உள்ளது?

By Yashini Sep 11, 2024 02:30 PM GMT
Report

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை திருத்தலத்தில்தான் இந்த அதிசய மரம் உள்ளது.

உலகிலேயே முதன்முதலில் தோன்றிய கோயில் என்ற பெருமை மிக்கது உத்தரகோசமங்கை புனிதத் தலம்.

சிவபெருமானின் அடி முடியை எப்படி அறிய முடியாதோ, அப்படித்தான் இந்த கோயிலின் சிறப்பும், பெருமையும் என்று சொல்லப்படுகிறது.

உலகிலேயே முதன்முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட கோயில் : எங்கு உள்ளது? | First Temple Built For Lord Shiva In The World

இந்தக் கோயிலில்தான் முதன் முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. இக்கோயில் ஆருத்ரா தரிசனத்திற்கு மிகவும் புகழ் பெற்ற கோயிலாகும்.

இந்தத் தலத்தின் மூலவர் மங்களநாதர் சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவராவார்.

இக்கோயிலில் சிவபெருமானை "மங்களநாதர்" என்றும் பார்வதி தேவியை "மங்களாம்பிகை" என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

உலகிலேயே முதன்முதலில் சிவனுக்காக கட்டப்பட்ட கோயில் : எங்கு உள்ளது? | First Temple Built For Lord Shiva In The World

இந்தக் கோயிலின் முதல் அதிசயம் மரகத நடராஜர் சிலை என்று சொன்னால், இரண்டாவது அதிசயம் கோவிலில் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான இலந்தை மரம்தான்.

இந்த இலந்தை மரம்தான் மாணிக்க வாசகர் அமர நிழல் தந்தது. இந்த மரத்திற்கு அடியில்தான் மாணிக்கவாசகருக்கு இறைவன் வித்தகன் வேடத்தைக் காட்டி அருளினார்.

இந்த மரத்திற்கு அடியில்தான் வியாசரும், பராசரரும் தவம் இருந்தார்கள். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கூட இந்த மரத்தின் அடியிலே தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US