உலகின் 4 யுகங்களும் அதன் மர்மங்களும்
உலகில் மொத்தம் நான்கு யுகங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படியாக நாம் இப்பொழுது நான்காவது யுகத்தில் இருக்கின்றோம். இதில் ஒவ்வொரு யுகத்திற்கு பின்னாலும் ஒவ்வொரு கதையும் மர்மங்களும் இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
1. சத்ய யுகம்:
இந்த யுகத்தில் சத்தியம் நிலைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அதாவது மனிதர்களின் தூய்மையான காலமாகும். இங்கு ஒழுக்கமும் தர்மம் காக்கப்பட்ட காலம் ஆகும். இங்கு மக்கள் தர்ம நெறி தவறாமல் வாழ்ந்தார்கள். அதோடு யார் மனதிலும் வஞ்சகம் இல்லாமல் பிறரை துன்புறுத்தாமல் வாழந்த காலம் ஆகும்.
2. திரேதா யுகம்:
திரேதா யுகம் என்பது "சடங்குகளின் யுகம்" என்று சொல்லப்படுகிறது. இந்த யுகம் சத்திய யுகத்தை காட்டிலும் சற்று பின்வாங்கிய நிலையில் உள்ள யுகம் ஆகும். அதாவது இந்த யுகத்தில் நான்கில் மூன்று பங்கு தர்மமும் நான்கில் ஒரு பங்கு அதர்மமும் (அநீதி) இருந்ததாக குறிக்கப்படுகிறது. ராமாயணம் போன்ற காவியங்கள் இங்கு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த யுகத்தில் சடங்குகளும், தியாகங்களும் முதன்மை வகித்துள்ளது.
3. துவாபர யுகம்:
இந்த யுகம் "சந்தேக யுகம்" என்று சொல்லப்படுகிறது. இந்த யுகத்தில் சத்தியம் இன்னும் சரிந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. தர்மமும் அதர்மும் சமநிலையில் உள்ள யுகம் ஆகும். இந்த யுகத்தில் தான் தர்மத்தின் பாடமான மஹாபாரதம் நிகழ்ந்தது.
4. கலியுகம்:
இந்த யுகம் தான் இறுதியான யுகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யுகத்தில் நாம் தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இந்த யுகம் அதர்மமத்தின் ஆதிக்கம் கொண்ட யுகம் என்று சொல்லப்படுகிறது. கடவுளுக்கு மனதில் துளியும் இடம் கொடுக்காத யுகம் ஆகும். இந்த யுகத்தில் அறநெறிகள் தவறுதல், ஒழுக்கக்கேடு போன்றவை நிகழும் காலம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |