வீட்டு வாசலில் இந்த பொருள் இருந்தால் வறுமை உண்டாகும்
வீடு என்பது நேர்மறை ஆற்றல் கொண்டு நிரம்பி இருக்க வேண்டும்.அப்படியாக வீட்டில் சில பொருட்களை நுழைவாயிலில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல் உருவாகுவதோடு நிதி நெருக்கடிகளும் ஏற்படும்.அப்படியாக வீட்டின் நுழைவாயிலில் நாம் வைக்க கூடாத பொருட்களை பற்றி பார்ப்போம்.
ஜோதிடத்தில் வாஸ்துபடி, ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உரியது ஆகும்.இதனால், வீட்டில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது.அப்படியாக வீட்டில் வைக்கும் பொருட்களை தவறான திசையில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல் எளிதில் வீட்டிற்குள் நுழைகிறது.
நம்முடைய வீடுகளில் சிலர் வீட்டின் நுழைவாயிலில் குப்பைகள் வைக்கும் பழக்கம் வைத்திருக்கின்றனர்.அவ்வாறு வைக்கும் பொழுது லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.ஆதலால் அந்த வீட்டில் வறுமை போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்.
வாஸ்துபடி வீட்டின் பிரதான நுழைவாயில் எப்போதும் வீட்டின் முன்னிருக்கும் சாலையை விட உயரமாக இருக்க வேண்டும். வீட்டின் வாயில் சாலைக்கு கீழே இருந்தால், எதிர்மறை ஆற்றலின் தாக்கம் வீட்டினுள் இருக்கும். அவ்வாறு இருக்கும் பொழுது வீட்டில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு நேராக முள் மரங்களை நடக்கூடாது.இவ்வாறு செய்யும் பொழுது ஒரு விதமான முக சுளிப்பு உண்டாக்குவதோடு அவை வீட்டில் இருக்கும் நல்ல எண்ணங்களை மாற்றி விடும். சிலர் வீட்டை அழகாக்குவதற்கு பல வகையான கற்கள் மற்றும் செங்கற்களை வீட்டிற்கு வெளியே வைத்திருப்பார்கள்.
வாஸ்து படி,அவ்வாறு கற்கள் வைக்கும் பொழுது வாழ்க்கையின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது.எனவே, வீட்டிற்கு வெளியே கற்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்றுவது நல்லது. மிக முக்கியமாக வீடுகளுக்கு வெளியே அழுக்கு நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் போழ்து அங்கு லட்சுமி தேவி குடியிருப்பதில்லை. வீட்டின் முன் அழுக்கு நீர் தேங்கினால் அவை குடும்பத்தினரின் உடல் நிலையை பாதிக்க கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |