கஜகேசரி யோகத்துடன் 2026 ஆம் ஆண்டை கொண்டாடப்போகும் 3 ராசியினர்
2025 ஆம் ஆண்டு இன்னும் 45 நாட்களில் முடிந்து புதிய வருடத்தை வரவேற்க இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டை முன்னிட்டு ஜோதிடத்தில் பல மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அப்படியாக புத்தாண்டின் தொடக்கத்தில் கஜகேசரி யோகம் உருவாகுகிறது.
அதாவது குரு மற்றும் சந்திரன் ஒரு ராசியில் இணைந்து ஒரு நல்ல யோகத்தை உருவாக இருக்கிறார்கள். கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் குரு வக்ர நிலையில் பயணித்து வருகிறார். 2026 ஆறாம் ஆண்டில் குரு பகவான் மிதுன ராசியில் இருப்பார். 2026 ஆம் ஆண்டில் குரு சில மாதங்கள் வக்ர நிலையில் பயணம் செய்வார். இதற்கிடையே ஜனவரி 2, 2026 அன்று காலை 9. 25 மணிக்கு சந்திர பகவான் மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
பிறகு ஜனவரி 4, 2026 அன்று காலை 9:42 மணி வரை சந்திரன் மிதுன ராசியில் தான் இருக்கிறார். இந்த இரண்டு நாட்கள் சந்திரனும் குருவும் இணைவது கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஒரு சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில் எந்த ராசியினர் மிகச் சிறந்த பலன்களை பெறப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு அவர்கள் தொழில் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கபோகிறது. அவர்கள் நீண்ட வருடமாக நினைத்திருந்த விஷயங்களை அடைய கூடிய அனைத்து வழிகளையும் பெறப் போகிறார்கள். குடும்பத்தில் நிதிநிலை நல்ல நிலைமையில் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழலை பெறப்போகிறார்கள். அதோடு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான யோகம் உருவாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு முதல் அவர்கள் வாழ்க்கையில் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள போகிறார்கள். இவர்கள் எதையும் துணிந்து செய்யக்கூடிய நம்பிக்கை பிறக்கும். இவர்களை சுற்றி உள்ளவர்கள் மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தில் மூழ்கும் அளவிற்கு இவர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த இடத்தை அடையப் போகிறார்கள். திருமண வாழ்க்கையில் சந்தித்த அனைத்து இன்னல்களும் விலகப் போகிறது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு இவர்களுக்கு நல்ல தொடக்கமாக அமையப் போகிறது. கடந்து சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்த துலாம் ராசியினர் இந்த ஆண்டு முதல் அவர்கள் உடைய மன கவலைகள் எல்லாம் விலகி ஒரு புதிய பாதையை நோக்கி பயணம் செல்லக்கூடிய ஒரு நிலையை பெறப்போகிறார்கள். இவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றமும் அவர்கள் மனதில் இருந்து குழப்பங்களும் விலக போகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் இவர்களுக்கு கைக்கூடி வரக்கூடிய அமைப்பு உருவாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |