6 மாதத்திற்கு ஒருமுறை நிறத்தை மாற்றும் விநாயகர்! என்ன காரணம் தெரியுமா?
6 மாதத்திற்கு ஒருமுறை நிறம் மாறும் விநாயகரை பற்றிய சுவாரஸ்ய தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எங்கு உள்ளது?
தமிழக மாவட்டமான நாகர்கோவில், தக்கலை திருத்தலத்தில் உள்ள மகாதேவர் கோவிலின் தென்கிழக்கு மூலையில் அரச மரத்தின் அடியில் விநாயகர் உள்ளார்.
இந்த விநாயகர் ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும், தை முதல் ஆனி வரையிலான உத்தராயணக் காலத்தில் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கிறார்.
இந்த நிற மாற்றத்திற்கு என்ன காரணம் என்றால் சந்திரகாந்தக் கல்லினால் விநாயகர் சிலை வடிக்கப்பட்டது தான் என்று சொல்கிறார்கள்.
இதைப்போலவே, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயத்தின் உட்புறத்தில் அமைந்திருக்கும் மூலஸ்தான பிரகாரத்தில் சந்திரகாந்த கல் உள்ளது.
இதனால் அந்த இடத்தில் எப்பவும் குளிர்ச்சியாகவே இருக்கும். இந்த காரணத்தினால் தான் சந்திரகாந்த கல்லில் பிள்ளையார், தட்சிணா மூர்த்தி, பெருமாள், ராமர், அம்மன், சந்திரன் போன்ற சிலைகளை வடித்தால் அருட்கடாட்சம் மிகுந்திருக்கும்.