2025 காயத்ரி ஜெயந்தி எப்பொழுது? தோஷம் விலக செய்யவேண்டிய பரிகாரங்கள்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக இருக்கும் ராகு கேது ஒரு கிரகங்களோடு சேரும் பொழுது பல்வேறு விதமான தாக்கங்களை கொடுக்கிறது. அப்படியாக சிலருக்கு ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருக்கும். அதனால் அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவார்கள்.
எடுத்த காரியங்களில் தடைகள், தொடர் தோல்வி, அவமானம் போன்ற விஷயங்கள் இந்த ராகு கேது தோஷம் கொடுத்து விடும். அந்த வகையில் இந்த தோஷம் உள்ளவர்கள் அதில் இருந்து விடுபட நாளை (09-08-2025) வருகின்ற சக்தி வாய்ந்த காயத்ரி ஜெயந்தியை பயன்படுத்துக் கொள்ளலாம்.
இந்து மதத்தில் காயத்ரி ஜெயந்தி மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அதாவது மிகவும் அற்புத ஆற்றல் நிறைந்த காயத்ரி மந்திரத்தை விஸ்வாமித்திரர் இந்த நாளில் உச்சரித்ததால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்களின் தோஷத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை பெறலாம். அதிலும் அவர்கள் அந்த பரிகாரத்தை வீட்டிலே செய்யலாம்.
பொதுவாக மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆக காயத்ரி மந்திரம் இருக்கின்றது. அந்த மந்திரத்தை எப்பொழுது சொல்லி வழிபாடு செய்தாலும் சரியான இடத்தில் அமர்ந்து முறையாக வழிபாடு செய்வது அவசியம்.
அதனால், நாளை வழிபாடு மேற்கொள்ளும் முன் நன்றாக குளித்து பூஜை அறையை சுத்தம் செய்து காயத்ரி தேவியின் திருவுருவப்படம் அல்லது சிலைகளை ஒரு மணப்பலகையில் வைத்து பூக்கள் கொண்டு அலங்கரித்து தீபம் ஏற்ற வேண்டும்.
பின்னர் காயத்ரி தேவிக்கு முன்பாக சிறிய ஹோமம் போல் வளர்த்து அதில் வரும் நெருப்பில் நெய், எள், சந்தனம் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த ஹோமம் நம்முடைய கர்மவினைகளை சரி செய்து அதனால் உண்டாகும் தடைகளை நம் வாழ்க்கையில் இருந்து விலக்கி வெற்றிகளைக் கொடுக்கிறது.
பிறகு அந்த ஹோமம் முடித்து கிழக்கு நோக்கி அமர்ந்து காயத்ரி மந்திரத்தை மனதை ஒருநிலை செய்து உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை நாளை முடிந்தால் 108 முறை, 1008 முறை அல்லது 1,00,008 முறை என உச்சரிப்பது மிக சிறந்த பலன் அளிக்கும்.
இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு சூரிய பகவானின் அருளும் காயத்ரி தேவியின் அருளும் பரிபூர்ணமாக கிடைக்கும்.
காயத்ரி மந்திரம்:
"ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்"
இந்த சக்தி வாய்ந்த மந்திரங்கள் உச்சரித்து வழிபாடு செய்யும் பொழுது நம் மனதும் ஆன்மாவும் சுத்தமாகின்றது. பிறவி பலனை அடைய இந்த மந்திரம் வழி வகுக்கிறது. அதோடு ராகு கேது கொடுக்கும் மாயை விலகி நன்மை பிறக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







