எல்லையற்றது இறைவழிபாடு என்றாலும் சில இடங்களில் இறைவழிபாட்டிற்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.அப்படியாக பல கோயில்களில் காலம் காலமாக சில விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வருகின்றனர்.அந்த வகையில் இந்தியாவில் அமைந்து உள்ள ஒரு முருகன் கோயிலில் இன்றளவும் பெண் பிள்ளைகள் கோயிலுக்குள் செல்ல கூடாது என்ற விதிமுறைகள் உள்ளது.
அதாவது பிறந்த ஒரு மாதம் ஆன பெண் குழந்தையாகவே இருந்தாலும் கோயிலுக்குள் செல்ல கூடாது என்ற அபூர்வ கட்டுப்பாடுகள் கொண்ட முருகன் கோயில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது அதை பற்றி பார்ப்போம்.
நம் இந்தியாவில் மிகவும் புனித நகரமாக கருதப்படும் ஹரியானாவில் உள்ள குருசேத்திரம் பல வரலாற்று சிறப்புக்கள் கொண்டது.
இங்கு தான் ருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை ஞானத்தை வழங்கினார்.அப்படியாக குருசேத்திரத்தில் பல முக்கியமான தலங்கள் அமைந்துஉள்ளது.அதில் குருசேத்திரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிஹோவா என்ற பகுதியில், கார்த்திகேயன் என்ற மிகவும் பிரபலமான கோயில் உள்ளது.
இங்கு தான் நூற்றாண்டுகளாகவே பெண் குழந்தைகள் கருவறைக்கு சென்று முருகப்பெருமானை வழிபடக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் கொண்டுள்ளது.இங்கு முருக பெருமான் பிண்டி வடிவில் வீற்றிருக்கிறார்.
எனவே தான் இது கார்த்திகேயா கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்குள்ள முருகரை கருவறைக்குள் சென்று பெண்கள் தரிசனம் செய்தல் அவர்கள் வாழ்க்கையில் பல தீராத கஷ்டங்கள் மற்றும் திருமண வாழ்வில் சில அபசகுனமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த கோயிலில் மின் விளக்குகளுக்கு பதில் ஜோதி மட்டுமே எரியும். அதே போல் பெண்கள் கோயிலுக்கு வெளியே நின்று கார்த்திகேயனிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள்.வித்யாசமாக இங்குள்ள கோயிலில் கடுகு எண்ணையில் தீபங்கள் ஏற்றுகின்றனர்.
இதற்கு பின்னால் ஒரு புராண வரலாறும் இருக்கிறது அதாவது ஒரு முறை சிவபெருமான் கார்த்திகேயனை பிஹோவா யாத்திரைக்குச் செல்லும்படி கட்டளையிட கார்த்திகேயரின் உஷ்ண உடலுக்கு குளிர்ச்சி அளிக்க, முனிவர்கள் அவருக்கு கடுகு எண்ணெயை வழங்கினர்.
அதே போல் அவரின் உடலும் குளிர்ச்சி அடைந்தது.அதனை தொடர்ந்து அன்று முதல் இன்று வரை கார்த்திகேயரின் பிண்டிக்கு கடுகு எண்ணெய் வார்க்கும் வழக்கம் இருந்து வருகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |